பக்கம் எண் :

253கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

340.நெறிவார் சடையாய், நிலையின்மை நீஒன்(று)
அறியாய்கொல்! அந்தோ! அயர்ந்தாள்; - நெறியில்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.

41

341.நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும்யாம்
என்றும் நினைந்தாலும் என்கொலோ! - சென்றுதன்
தாள்வா னவர்இறைஞ்சுதம் தண்சாரற் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு.

42

342.அருளாத வாறுண்டே! யார்க்கேனும் ஆக;
இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில், வியன்கயிலை மேயான்வந்(து)
இம்மையே தீர்க்கும் இடர்.

43


எய்தமாட்டாது அறியாமையில் அழுந்தியிருக்கும் பெத்தான்ம நிலை. அந்நெறியும் அணித்தாதலாவது அவ்வாறான அறியாமை நீங்க, காளத்தி நாதரது திருவருளை எய்துதல். 'இந்நிலை அஞ்செழுத்தை ஓதி உணர்தலால் உளதாம்' என்றபடி. கண்டீர், முன்னிலை யசை.

340. குறிப்புரை: "நெறி வார் சடை" என்பதற்கு, மேல்1 உரைக்கப்பட்டது. 'இவளது நிலையின்மை' என அந்த ஒருசொல் வருவிக்க. நிலை - நிலைபேறு. அஃது இன்மை யாவது இறந்துபாடு, ஒன்று - சிறிது 'ஒன்றும்' என இழிவு சிறப்பும்மை விரிக்க. நெறியில் - வழியில் 'நெறியில் தூங்கும்' என இயையும். 'கண் அருவி சோர நின்று அயர்ந்தள்' எனக் கூட்டி முடிக்க. அயர்தல் -சோர்தல். இதுவும் செவிலி கூற்று.

341. குறிப்புரை: "என் கொலோ" என்பதனை இறுதிக் கண் கூட்டுக. நிற்றல் முதலியன அத்தொழில் நிகழும் காலத்தைக் குறித்தன. 'தன் தாள் வானவர் சென்று இறைஞ்சும் காளத்தி ஆள்வான்' என இயைக்க; ஆறு - காரணம், கொல், ஐயம், ஓ அசை. "அருளாதவாறு என்கொல்" என்றது, அருளைப் பெறுதற்கண் எழுந்த வேட்கை மிகுதியால். அங்ஙனம் கூறியதனானே, 'நினைந்தார்க்கு அவன் அருளாமை இல்லை. என்பது பெறப்பட்டது. அருளும் காலத்தை அவன் அறிதலன்றிப் பிறர் அறியு மாறில்லை.

342. குறிப்புரை: பொருள் - பொருளியல்பு. அஃதாவது, அவனது இயல்பு, ஆய்தல், ஆய்ந்து உணர்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. இதனை முதலிலும், "யார்க்கேனும் ஆக என்பதை


1. வெண்பா - 15.