| 343. | இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு நடவீரோ காலத்தால்; நாங்கள் - கடல்வாய்க் கருப்பட்டோங்(கு) ஒண்முகில்சேர் காளத்தி காண ஒருப்பட்டோம் கண்டீர்; உணர்ந்து. | | 44 |
| 344. | உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்; புணருங்கால் ஆரமுதே போலும்; - இணரில் கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய், இனியவா காண்நின் இயல்பு. | | 45 |
உன்னில் என்பதன் பின்னும் வைத்து, 'எம் ஈசன் அருளாதவாறு உண்டே' என முடிக்க. 'எமக்கு அருளாதவாறு' என ஒருசொல் வருவிக்க. "யார்க்கேனும்" என்றது, 'உயர்வு தாழ்வு நோக்காது' என்றபடி. எனவே, 'எமக்கு அருளா தொழிதல் இல்லை' என்றதாம். மேலை வெண்பாவால் ஆற்றாமை கூறிய நாயனார் இவ்வெண்பாவில் ஆற்றினமை கூறினார். "எம் ஈசன்" என்றது, 'அவன்' என்னும் அளவாய் நின்றது. 343. குறிப்புரை: "உமக்கு ஓர் இடம் நாடிக்கொண்டு காலத்தால் நடவீர்" என்பதனை இறுதிக்கண் வைத்துரைக்க. "இடரீர்" என உயர்திணையாகக் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு. இடராவன பலவற்றையும் நோக்கிப் பன்மையாற் கூறினார். "நாடிக்கொண்டு" என்பது ஒருசொல். "காலத்தால்" என்பது வேற்றுமை மயக்கம். கருப் படுதல் - நீரை நிரம்ப முகத்தல் ஒருப்படுதல் - மனம் இசைதல். கண்டீர், முன்னிலை யசை. 'உணர்ந்து நடவீர்' என இயையும். இடராவனவற்றிற்கு இடம் காளத்தி காணாதாரேயன்றிக் கண்டவரல்லர்' என்பது கருத்து. 344. குறிப்புரை: இணரில் கனிய - கொத்துக்களில் கனிகளை யுடைய. உணருங்கள் - நினைக்கப் புகும் பொழுது. 'உரு ஒன்றைத் தெரியக் காட்டாய்' என்க (உரு இன்றியே உன்னைப் புணர வல்லவர்) புணருங்கால் நின் இயல்பு ஆரமுதே போலும், (ஆதலின்) இனியவா காண் - (நின்இயல்புகள்) மிக இனியவாமாற்றை நீ அறிவாயாக. 'இனியவாறு' என்பது ஈறு குறைந்து செய்யுள் முடிபு எய்திநின்றது. ஆறு - தன்மை அஃது அதனை உடையவற்றைக் குறித்தது. "இனியவா" என்றது உண்மையேயாயினும், "உருத்தெரியக் காட்டாய்," என்றதனால், நகையாடல்போலக் கூறப்பட்டது. புணர்தல் - தழுவுதல் 'புணருங்கால் இன்பம் தரும் பொருள்கள்யாவும் வேறுபட்ட பல உருவுடையனவாயே இருக்க, நீ யாதோர் உருவும் இன்றியே, புணருங்கால் பேரின்பம் தருபவனாய் உள்ளாய்' என வியந்துகூறியவாறு. 'சிவனது இன்பம் ஐம்புல இன்பம்
|