| 346. | உரையும் பொருளும், உடலும் உயிரும், விரையும் மலரும்போல்; விம்மிப் - புரையின்றி சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான் நின்றவா றெங்கும் நிறைந்து. | | 47 |
| 347. | நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும், ஒன்றின் மறைந்தைம் புலன்காண வாராய்; - சிறந்த கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய்; பணியாயால்; என்முன் பரிசு. | | 48 |
346. குறிப்புரை: புரை - குற்றம், அஃது இங்கு, 'தடை' எனப்பொருள் தந்தது. விம்மி - பருத்து. "சென்றவாறு" என்பது 'தான் வேண்டியவாறு' என்றபடி. ஓங்குதல். உயர்தல். 'விம்மி.... ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான் எங்கும் நிறைந்து நின்றவாறு, உரையும் பொருளும்.... போல்' என இயைத்து முடிக்க. "எங்கும்" என்பதன்பின் 'எல்லாப் பொருளிலும்' என ஒருசொல் வருவிக்க. உரை - சொல், விரை - மணம், "போல்" என்னும் முதல் நிலை, 'போல்வது' என முற்றுப் பொருள் தந்தது. "பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர்"3 என்பதில் "நேர்" என்றது போல, இறைவன் எல்லாப் பொருளிலும் அது அதுவாய்; வேற்றுமையின்றிக் கலந்து நிற்றற்கு "சொல்லும் பொருளும் முதலிய மூன்று உவமைகளைக் கூறினார். அவைபொதுப் படப் பிரிப்பற்றதாம் நிலையை உணர்த்தி நின்றன. 'இறைவன் இவ்வாறு நிற்கும் நிலையே உபநிடதங்களில் 'அத்துவிதம்' எனப்படுகின்றது' என்பதைப் பிற்காலத்தில் மெய்கண்ட தேவர் தமது சிவஞான போத நூலாலும், அதன் வார்த்திகத்தாலும் விளங்கினார். 347. குறிப்புரை: "சிறந்த.... ஆள்வாய்" என்பதை முதலிற் கொண்டு, இறுதியில் 'முன் பரிசு என்? பணியாய்' என மாற்றி முடிக்க. "பார் அவன் காண்; பாரதனில் பயிர் ஆனான்காண்; பயிர் வளர்க்கும் துளி அவன்காண்; துளியில் நின்ற - நீர் அவன்காண்"2 என்றாற்போலப் பல இடங்களிலும் 'எல்லாப் பொருளும் அவனே' என்றல், மேலை வெண்பாவிற் கூறிய வாறு, எங்கும், எல்லாப் பொருளிலும் உடலில் உயிர்போல வேற்றுமையின்றி அது அதுவேயாய்க் கலந்து நிற்கும் கலப்பு நோக்கியே என்பது, "நிறைந்தெங்கும் நீ யேயாய் நின்றாலும்" என்றமையால் விளங்கும் 'மறைந்து, ஐம்புலன் ஒன்றின் காண வாராய்' என இயைக்க 'உடலில் உயிர் எங்கும் நிறைந்து நிற்பினும் ஐம்பொறியில் ஒன்றிற்கும் புலனாகாது மறைந்து நிற்றல்போல, எல்லாப் பொருளிலும் நீ நிறைந்து நிற்பினும் ஐம்பொறிகளில் ஒன்றிற் புலனாகாதே மறைந்து
1. திருக்குறள் - 813. 2. திருமுறை - 6.87.6
|