| 348. | பரிசறியேன்; பற்றிலேன்; கற்றிலேன்; முற்றும் கரியுரியாய் பாதமே கண்டாய்; - திரியும் புரம்மாளச் செற்றவனே! பொற்கயிலை மன்னும் பரமா! அடியேற்குப் பற்று. | | 49 |
| 349. | பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே; முற்றாவெண் திங்கள் முளைசூடி; - வற்றாவாம் கங்கைசேர் செஞ்சடையான்; காளத்தி யுள்நின்ற மங்கைசேர் பாகத்து மன். | | 50 |
நிற்கின்றாய்; உன்னை முன் பரிசு (நாங்கள் நினைக்கும் முறைமை)யாது? பணித்தருள்' என்பது இவ்வெண்பாவின் சிறந்த பொருள் நினைத்தல் மனத்தின் தொழிலாயினும் அஃது ஐம்பொறிகள் உணர்ந்தவற்றையே நினைத்தல்லலது, அவற்றிற்கு உணர வராத பொருளை நினைக்க வல்லது அன்று ஆதலின், "ஐம்புலன் ஒன்றின் காணவாராய்; உன்னை நாங்கள் நினைக்கும் பரிசு என்' என்றார். 'கருவிகள் வழியாக நினைக்க முயலாமல் அருள் வழியால் நினைக்கின் காணப்படுவான் - என்பது, "பணியாய்" என்றதனாற் போதரும் குறிப்புப் பொருள். புலன், பொறிகளை உணர்த்தலின் ஆகுபெயர். காண்டல் - புலப்பட உணர்தல். கணிவேங்கை மரம், ஆல், அசை. 348. குறிப்புரை: "திரியும் புரம்" என்பது முதலாகத் தொடங்கி இறுதியில் 'அடியேற்குப் பற்றுக் கண்டாய்' என முடிக்க. பரிசு - பொருள்களின் நன்மை தீமை' அவற்றைப் பகுத்தறியும் அறிவிலேன் என்றபடி. அறிவில்லாமையால் பற்றத் தகுவதனைப் பற்றிலேன். கற்றிலேன் - அறிந்து பற்றினவர்களை அடைந்து கேட்டும் உணர்ந்திலேன். 'கரி உரியாய் பாதமே அடியேற்கு முற்றும் பற்று' என இயைக்க. முற்றும் பற்று - முற்றுமான (முழுமையான) துணை. 'வேறு துணை ஒன்றும் இன்று' என்பதாம். "பரிசறியேன்" என்பது முதலாகக் கூறியன, "யானாக அத்தன்மையைப் பெறும் ஆற்றல் இலேன்' என்றபடி உன் பாதமே துணை என அடைந்தேன்' என்பதாம். இனி உன் திருவுள்ளம் இருந்தவாறு செய்க' என்பது குறிப்பெச்சம். "கரி உரியாய்" என்பது முன்னிலை விளைக்குறிப்புப் பெயர். கண்டாய், முன்னிலையசை. 'திரிபுரம்' என்பது, "திரியும் புரம்" என வினைத்தொகையும் ஆம் என்பது இது போலும் திருமுறை ஆட்சியால் அறிக. திரியும் புரம்வானத்தில் உலாவு கின்ற கோட்டை மதில்கள். 349. குறிப்புரை: 'எவ்வுயிர்க்கும் பற்றாவான்' என எடுத்துக் கொண்டு. "பசுபதி" முதலிய பெயர்கள் பலவற் றோடும் முடிக்க. பற்று - துணை. 'பெத்தம், முத்தி என்னும் இரு நிலைகளிலும
|