| 350. | மன்னா! கயிலாயா! மாமுத்தம், மாணிக்கம் பொன்னா மாக்கொண்டு பூணாதே - எந்நாளும் மின்செய்வார் செஞ்சடையாய்! வெள்ளெலும்பு பூண்கின்ற(து) என்செய்வான்? எந்தாய்! இயம்பு. | | 51 |
| 351. | இயம்பாய்; மடநெஞ்சே! ஏனோர்பால் என்ன பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய்? - புயம்பாம்பால் ஆர்த்தானே! காளத்தி அம்மானே என்றென்றே ஏத்தாதே வாளா இருந்து. | | 52. |
| 352. | இருந்தவா காணீர்; இதுவென்ன மாயம்! அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த் |
எஞ்ஞான்றும் துணையாவான் பசுபதி முதலிய வகையிற் சொல்லப்படும் சிவன் ஒருவனே' என்பதாம். பசுபதி - உயிர்கள் எல்லாவற்றிற்கும் தலைவன். இப்பெயர் சிவன் ஒருவனுக்கே உரியதாதலை நோக்குக. ஆதல் - பெருகுதல். "வற்றா" என்னும் பன்மை காலம் பற்றி வந்தது. 'காலந்தோறும் பெருகும்' என்க, மன் - உடையவன். 350. குறிப்புரை: மன்னன் - அனைத்துயிரையும் ஆள்பவன். தம், மாணிக்கம்" என்பவற்றின் 'இவைகளை' என ஒருசொல் வருவிக்க. பொன் - அழகு. "மின் செய்" என்ப தில் செய், உவம உருபு. செய்வான், வான் ஈற்று வினை யெச்சம். செய்தல், பயன் தருதல் 'பூணாமைக்குக் காரணம், அவைகளால் தான் சிறக்க. வேண்டுவதொரு குறையில்லாமை' என்பதும், 'பூணுதல், தனது நித்தியத் தன்மையை உணர்த்துதற் பயன் நோக்கி' என்பதும் குறிப்புக்கள். "முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா; யாரே அழகுக்கு அழகு செய்வார்1 எனப் பிற்காலத்து ஆசிரியரும் கூறினார். 351. குறிப்புரை: 'மட நெஞ்சே, புயம் பாம்பால்.... இருந்து ஏனோர்பால்.... உற்றாய்? இயம்பாய், என இயைத்துக் கொள்க. பயம் - பயன். பார்த்து - எதிர் நோக்கி, பற்றுவான் - பற்றுதற் பொருட்டு. புயம் - தோள். ஆர்த்தல் - கட்டுதல். 'புயத்தைப் பாம்பாலே ஆர்த்தானே' என்க. "என்ன பயம் பார்த்து உற்றாய்" என்னும் வினா, 'அவரால் கிடைப்பது யாதும் இல்லை' என்னும் குறிப்புடைத்தாய் நின்றது. 'காளத்தி அம்மான் பணியில் வாளா இருந்து, ஏனோர்பால் பயம் பார்த்து உற்றமையால் நீ அறிவினை இழந்தாய்' என்பது தோன்ற "மட நெஞ்சே" என்றார். 352. குறிப்புரை: 'கயிலாயத்து அண்ணல், தன் அடியார் வான் ஆளவும், மண் ஆளவும் வைத்து, தான் நாளும் வருந்திப் போய்ப்
1. நீதிநெறி விளக்கம் - 12.
|