| தானாளும் பிச்சை புகும்போலும்! தன்அடியார் வானாள, மண்ணாள வைத்து. | | 53 |
| 353. | வைத்த இருநிதியே, என்னுடைய வாழ்முதலே, நித்திலமே, காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர் அக்காலத் தாசை அடிநாயேன்; காணுங்கால் எக்காலத் தெப்பிறவி யான். | | 54 |
| 354. | 'யானென்றும் தானென்(று) இரண்டில்லை' என்பதனை யானென்றுங் கண்டிருப்பனா னாலும் - தேனுண்(டு) |
பிச்சை புகும்போலும்! இது என்ன மாயம்! ஆயினும் இருந்தவா காணீர்' என இயைத்து முடிக்க. முதற்கண், 'தொண்டர்காள்' என முன்னிலை வருவிக்க. 'இருந்தவாறு' என்பது குறைந்து நின்றது. மாயம் - அதிசயம், 'ஆயினும் நிகழலே செய்கின்றது' என்பதை "இருந்தவார்" என்றார். "ஆள" இரண்டும் வினைக்கண் வந்த செவ்வெண். வான் ஆள வைத்தலும், மண் ஆள வைத்தலும் அவரவர் செய்த தவத்திற்கு ஏற்பவாம். 'வேண்டுவார் வேண்டும் பயனை வழங்குபவன் பிச்சை புகுகின்றான்' என்றால், அஃது அதிசயமேயாயினும், ஊன்றி நோக்கின் அது தன்பொருட்டாகாது பிறர் பொருட்டாய், இயற்கையாய்விடும் - என்பது கருத்து இவற்குப் பிச்சையிடுவார். 'தந்தவன் தண்டல் செய்கின்றான்' என்னும் உணர்வு தோன்றப் பற்றுதல் பயன் என்க. 353. குறிப்புரை: 'வைத்த.... சுடரே, யான் காணுங்கால் எக்காலத்து, எப்பிறவி, ஒளி மொய்த்துச் சேர் அக்காலத்து அடிநாயேன் ஆசை' என இயைத்து முடிக்க. வைத்த - சேமித்து வைத்த. இரு - பெரிய. வாழ் முதல் - வாழ்விற்கு முதல். நித்திலம் - முத்து. வைத்த நிதி, இளைத்த காலத்தில் உதவும் வாழ்விற்கு முதலாலேதான் வாழ்வு உளதாகின்றது நித்திலம் - அழகைத் தரும் 'இறைவன் இம்மூன்றம் போல்பவனாய் உள்ளான்' என்பதாம். 'காலம்' என்பது அம்முக்குறைந்து, "கால்" என நின்றது. "பிறவி" என்பதும் ஆகுபெயராய், அஃது உள்ள காலத்தையே குறித்தது. "ஆசை" என்பதன் பின் 'உள்ளது' என்னும் பயனிலை எஞ்சி நின்றது. 'யான் உன்னை நேரே காணுங்காலம், எந்தக் காலத்தில்' உளதாகின்ற எனது பிறவிக் காலமோ அந்தக் காலத்தையே அடியேன் அவாவிநிற்கின்றேன்' என்பது இவ்வெண்பாவின் திரண்ட பொருள் 'அந்தக் காலமே எனக்கு ஒளி மிக்க காலமாகும்' என்பதும் கூறப்பட்டது. 354. குறிப்புரை: "தானென்று" என்பதிலும் "யானென்றும்" என்பதிற்போல எண்ணும்மை விரிக்க. இரண்டு இல்லை - வேறு
|