| அளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான் தெளிகொடான், மாயங்கள் செய்து. | | 55 |
| 355. | மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று, காயங்கொண் டாடல் கணக்கன்று; - காயமே நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலன்சீர் கற்பதே கண்டீர் கணக்கு. | | 56 |
வேறாய்ப் பிரிந்து நிற்றல் இல்லை. 'உடலும், உயிரும் போல் இருவரும் ஒன்றியே உள்ளேம்' என்றபடி. 'இவ்வாறு நாங்கள் இருவரும் ஒன்றியிருப்பினும் அவர் என்னோடு இருக்கும். இருப்பினை யான் உணராதபடி அவன் எனது அறிவை மறைத்தல் செய்கின்றான்' என்பது பிற்கூற்றின் பொருள். தெளி - தெளிவு. மாயம் - மறைத்தல். 'இரண்டில்லை' என்பது கலைஞானத்தால் உணர வருகின்றது. அவ்வுணர்வு பேதைப் பெண் காம நூற்பொருளை உணர்வது போல்வதே யன்றி, அனுபவ உணர்வு அன்றாகலானும், அனுபவ உணர்வு அவன் அருளவே வரும் ஆகலானும், | . . . . . . . . . . இரண்டில்லை என்பதனை | | யான் என்றும் கண்டிருப்பன் ஆனாலும்,- | கயிலை மேயான் | | மாயங்கள் செய்து தெளிகொடான் |
என்றார். எனவே, "கண்டிருப்பன்" என்றது கலைஞானத்தையும் "தெளி" என்றது அனுபவ ஞானத்தையும் ஆயின. இறுதியில், 'யான் செய்வது என்' என்னும் குறிப்பெச்சம் வருவிக்க. தெளிவித்தலே இறைவனுக்கு இயல்பாவதன்றி, மறைத்தல் அவனுக்கு இயல்பன்று ஆயினும், உடல் நலத்தையே செய்கின்ற மருத்துவன் கழலையைப் போக்கக்' கருவியாற் கீறி அழ வைப்பது போல, அவன் (இறைவன்) ஆணவத்தை மெலிவித்தற்கு அதனது மறைக்கும் ஆற்றலைச் செயற்படுத்துதலையே, அவனே மறைத்தலைச் செய்வதாக நூல்கள் கூறும். அவனது ஆற்றல் (சக்தி) ஆணவம் முதலிய மலங்களைச் செயற்படுத்தி மறைப்பினை உண்டாக்கும் பொழுது, 'திரோதான சக்தி' என்றும், மலம் நீங்கியபின் தன்னைக் காட்டியருளும் பொழுது 'அருட் சக்தி' என்றும் பெயர் பெறும். இரண்டும் செயலால் வேறாவன அல்லது பொருளால் வேறல்ல; ஒன்றேயாம். இரண்டும் கருணையே யன்றி, எதுவும் கொடிதன்று. திரோதான சக்தி மறக் கருணை; அருட் சக்தி அறக் கருணை, மறக் கருணையாவது, செயலால் வன்கண்மை யுடையது போன்று, பயனால் நலம் செய்வது; அறக் கருணையாவது, செயல், பயன் இரண்டினாலும் இனிதாவது. 355. குறிப்புரை: முதற்கண், 'உலகீர்' என்னும் முன்னிலை வருவிக்க. "ஐவர்" என்பதை முதலிற் கொள்க ஐவர் - ஐம்புலக்
|