| 356. | கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை வணக்கி வலைப்படா முன்னம், - பிணக்கின்றிக் காலத்தால், நெஞ்சே, கயிலாயம் மேவியநற் சூலத்தான் பாதம் தொழு. | | 57 |
| 357. | தொழுவாள்; பெறாளே; தோள்வளையும்; தோற்றாள் மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்; நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப் பெறுமாறு காணீர்என் பெண். | | 58 |
கள்வர். மாயம் - வஞ்சனை; அஃதாவது நல்லவர்போல் காட்டித் தீமையில் வீழ்த்துதல். 'கள்வர்' என்றதற்கு ஏற்ப. "சொன்ன" என்றாராயினும் 'செலுத்தியது' என்பதே பொருள். காயம் - உடம்பு. 'காயத்தை' என உருபு விரிக்க. கொண்டாடுதல் - பாராட்டுதல், அது இயன்ற மட்டும் பேணிக் காத்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. கணக்கு முறைமை, "கணக்கு அன்று" என்பதன்பின். 'ஏன் எனில்' என்பது வருவிக்க. காயமே - காயமோ. சீர் - புகழ். கற்பது - பலகாலும் சொல்லுதல். கண்டீர், முன்னிலை யசை. 356. குறிப்புரை: வணக்கி - தாம் சொன்ன படி கேட்க வைத்து, 'படுத்தல்' என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப் பட்டு, "படா" என வந்தது பிணக்கு மாறுபாடான எண்ணம். காலத்தால் காலத்தின்கண், 'இளமையிலே' என்றபடி, வேற்றுமை மயக்கம். 357. குறிப்புரை: 'என் பெண் மழுவாளன் காளத்தி வாழ்த்தி எழுவாள்; தொழுவாள்; தன் தோள்வளையும் தோற்றாள். ஆயினும் நறுமா மலர்க் கொன்றை பெறாளே; (இன்று இல்லை என்றாலும்) நாளை நம் முன்னே (அதனைப்) பெறாமாறு காணீர்' எனக் கூட்டிப் பொருள் கொள்க. "பெருளே" என்னும் ஏகாரம் தேற்றம். எழுவாள் - துயில் ஒழிவாள். இதுவும் செவிலி கூற்று. காப்பு மிகுதி முதலியவற்றுள் யாதானும் ஒரு காரணத்தால் தலைவி வேறுபட்டவழி, 'இஃது எற்றினான் ஆயிற்று' எனத்தாயர் ஆராய்வுழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றவாறே செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது. செவிலிதலைவியை "என் பெண்" என்று எடுத்துக் கூறியது, அவள்மாட்டுத் தனக்கு உள்ள அன்பின் மிகுதி தோன்றுவதற்கு. செவிலி ஆயத்தாரையும் உளப்படுத்து, "காணீர்" என்றாள். சிவபெருமானை வாழ்த்தியெழுதலும், தொழுதலும் உடையராயப் பேரன்பு செய்வார் என்றாயினும் ஒருநாள் அவனைத் தலைப்படவே செய்தல் இதன் உள்ளுறை.
|