| 362. | ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல் மாசில் நிறத்த மடக்குருகே, - கூசி இருத்தியாய், நீயும் இருங்கயிலை மேயாற்(கு) அருத்தியாய்க் காமுற்றா யாம். |
| 63 |
'ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் புகழ் அல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும்எனக் கேட்டீ ராகில்
நாடுந் தொழிலார்க்(கு) அருளல்லது நாட்ட லாமே.'1
எனத் திருஞானசம்பந்தர் அருளிச்செய்தமை காண்க.
361. குறிப்புரை: 'கோலச் சிறுகிளியே, (நீ) வேறாக வந்திருந்து, நின் பொன்வாயால், எம் ஈசன் திறம் மெல்லெனவே கூறாய்' இயைத்துக்கொள்க. பொன் - அருமை இதனைப் பேசுதல் பற்றிக் கொள்க. கோலம் - அழகு. வேறாக - தனியாக. வந்து இருந்து - யான் இருக்கும் இடத்திற்கு வந்து இருந்து. நீறாவும் + நீர் தாரும் - நீல நிறம் பொருந்திய. மஞ்சு - மேகம். குடுமி - சிகரம். வாள் - ஒளி. இது காளத்திப் பெருமான்மேல் காதல் கொண்டாள் ஒருத்தி தனது ஆற்றாமையால் தான் வளர்க்கும் கிளியை நோக்கிக் கூறி இரங்கியது. 'ஈசன் வாராவிடினும் அவன் திறத்தை பிறர் சொல்லக் கேட்பின் ஆற்றுதல் உண்டாகும்' என்பது கருத்து. திறம் - குணம். தன் சொல்லைக் கேட்டலும், கேட்டு மறுமொழி கூறுதலும் இல்லாதனவற்றைத் தனது ஆற்றாமை யால் அவற்றை யுடையனபோல வைத்து இங்ஙனம் கூறுவன வற்றை, 'காமம் மிக்க கழிபடர் கிளவி' என்பர். இறைவனிடத்தில் பேரன்பு. கொண்டவர்களும் அஃறிணைப் பொருள்களை நோக்கி இவ்வாறு கூறுதல் உண்டு.
362. குறிப்புரை: "மாசில் நிறத்த மடக் குருகே" என்பதனை முதலிற் கொள்க. மாசில் நிறம் - வெண்ணிறம். மடம் - இளமை. குருகு - பறவை. அஃது இங்கு நீர்நிலையைச் சார்ந்து வாழும் பறவையைக் குறித்தது. 'நீயும் எம்மைப்போல் கூசி இருத்தியாய்' என இயைக்க. கூசி யிருத்தல் - ஒடுங்கியிருத்தல். 'இருத்தி' என்னும் முன்னிலை வினையாலணையும் பெயர், 'ஆயினமையால்' என்னும்
1. திருமுறை 3.54.6.