பக்கம் எண் :

265கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

366.அலரோன், நெடுமால், அமரர்கோன், மற்றும்
பலராய்ப் படைத்துக்காத் தாண்டு - புலர்காலத்(து)
ஒன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ.

67

367.கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீப் பற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.

68

368.வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர்
செந்தறுகண் கேழல் திறம்புரிந்து - வந்தருளும்

'நினைவாரை, நேரே 'அஞ்சேல்' என்று ஆட்கொண்டு அருள் செய்வார் - எனவும், 'அண்டத்தார் சூடும் அலர் காளத்தி ஆள்வார் கழல்' எனவும் இயைக்க. "அஞ்சேல்" என்பது வேறு முடிபு ஆகலின் இட வழுவின்று. சூடுதல் - தலைமேற் கொள்ளல். கண்டாய், கண்டீர், முன்னிலை யசைகள்.

366. குறிப்புரை: ஈற்றடியை முதலிற் கொள்க. "அலரோன்" முதலிய மூவர்க்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் நிரலே கொள்க. 'ஆளுதல், அமரரை' என்க. "மற்றும் பலர்" என்றதற்கு தேவர் பலருள் அவரவர்க்கு உரிய தொழிலைக் கொள்க. 'தேவரை அணு பக்கமாக நோக்கின் பலராயினும், சம்பு பக்கமாக நோக்கின் சிவன் ஒருவனேயாம்' என்பது கருத்து. இதனால், 'தேவராவார் அதிகார மூர்த்திகள்' என்பது விளங்கும். புலர் காலம் - ஒடுக்கக் காலம். 'அப்பொழுது செயல் இன்மையின் தான் மட்டுமே உளன்' என்பதும், 'மீண்டு' என்றது, 'மறு படைப்புக் காலத்தில்' என்றபடி. 'பரம்பொருள் ஒன்றோ, பலவோ' என ஐயுறுவார்க்கு, 'ஒடுக்கக் காலத்து ஒன்றாகித் தோற்றக் காலத்தில் பலவாகும்' எனவும், 'அவ்வாறாகின்றவன் சிவனே' எனவும் கூறியவாறு.

367. குறிப்புரை: 'எத்துணைப் பேரையோ வென்றவர் எத்துணையோ பேர் இருப்பினும் காமனை வென்றவர் ஒருவரும் இலர்; அவனை வென்றவன் சிவன் ஒருவனே' என்பது உணர்த்தியவாறு. 'சிவனடியார்களும் காமனை வென்றார் எனின், அவரும் சிவனது அருளாலே வெல்லுதலின், அவர் வெற்றியும் சிவன் வெற்றியேயாம் என்க. பண்பு, குற்றம் செய்தாரை ஒறுத்துத் திருத்தும் குணம். 'அக்குணத்தோடு கூடியதே சிவனது கோபம்' என்றபடி. அனங்கன் - உருவிலி; மன்மதன். பற்று அற்று - துணை யில்லாமல். அஃதாவது 'காப்பவர் இல்லாமல்' என்றபடி.

368. குறிப்புரை: 'அஞ்சாமை' என்னும் பொருட்டாகிய "தறுகண்" என்பது ஒரு சொல்லாயினும் பிரித்துக் கூட்டல்