| கானவனாம் கோலமியான் காணக் கயிலாயா வானவர்தம் கோமானே, வா. | | 69 |
369. | வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல் தாமார் உலகில் தவமுடையார்! - தாம்யார்க்கும் காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத் தீண்டத்தான் பெற்றமையாற் சென்று. | | 70 |
370. | சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய், என்றும் அடியார்க்கு முன்னிற்பர்; - நன்று, |
முறைமையால் "கண்" என்பதனைத் தனிச்சொல்லாகப் பிரித்து, "செம்மை" என்பதனோடும் கூட்டுக. கேழல் - பன்றி. கேழல் திறம் - கேழலைக் கொல்லும் செயல் திறம். புரிந்து - செய்து. கானவன் - வேடன். கோலம் - வேடம். பார்த்தனைக் கொல்லச் சென்ற பன்றியைக் கொல்லும் முகத்தால் சிவபெருமான் அவனோடு போர்புரியும் திருவிளையாடலைச் செய்து அவனுக்குப் பாசுபதம் அளித்த வரலாற்றைப் பாரதம் கூறும் அச்செயல் அப்பெருமானது எளிவந்த கருணையை இனிது விளக்கி நிற்றலின், அந்த வடிவத்தைக் காண்பதில் இவ்வாசிரியர் அவாமிக்குடையாராயினார் என்க. பார்த்தன் - அருச்சுனன். 369. குறிப்புரை: வா மான் - தாவிச் செல்லுகின்ற குதிரை. வயம் - வெற்றி. விசயன் - அருச்சுனன். "தாம்" இரண்டில் முன்னது சாரியை 'தவம் உடையார்தாம் உலகில் ஆர்' என மாற்றி யுரைக்க. தாம் - படர்க்கைப் பன்மை இருதிகணைப் பொதுப் பெயர். அஃது எழுவாயாய் நின்று, பின் வந்த "அரியராய்" என்னும் பயனிலை கொண்டு முடிந்தது. 'தான் சென்று தீண்டப் பெற்றமையால், விசயனைப்போல் தவம் உடையார் உலகில் ஆர்' என்க. சிவபெருமான் பலர்க்கு அருள்புரியினும், மெய் தீண்டல் மிக அரிதாம். நாயன் மாருள்ளும் அப்பேறு மிகச் சிலர்க்கே கிடைத்தது. 'பார்த்தன் சிவபெருமானோடு மற்போர் தொடங்கிக் கட்டிப் புரண்டான்' என்றால், அவன் செய்த தவம் மிக மிகப் பெரிதேயாம். அதனால்தான் திருமுறைகளில் அவன் பல இடங்களில் எடுத்துப் பாராட்டப்படுகின்றான். "அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை ... என்மனத்தே வைத்தேனே,"1 "பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுபதத்தை யீந்தாய் ... தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறம் இலேனே"2 என்றார்போல வருவன பலவும் காண்க. 370. குறிப்புரை: 'கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்' என்பதை முதலில் வைத்து, "இவர் பத்தர்க்கு இனியவா நன்று" என
1. திருமுறை - 4.7.10. 2. " - 4.63.8
|