| கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்; இனியவா பத்தர்க் கிவர். | | 71 |
371. | இவரே முதல்தேவர்; எல்லார்க்கும் மிக்கார்; இவர்அல்லர் என்றிருக்க வேண்டா; - கவராதே காதலித்தின் றேத்துதிரேல், காளத்தி யாள்வார்நீர் ஆதரித்த தெய்வமே யாம். | | 72 |
372. | ஆம்என்று 'நாளை உள'என்று வாழ்விலே தாம்இன்று வீழ்தல் தவமன்று; - யாமென்றும் |
முடிக்க. "கனியவாம் சோலைக் கயிலாயம்" என்பதற்குப் பொருள் மேலே1 உரைக்கப்பட்டது. 'சிவபெருமான் பலர்க்கும் மிகச் சேயனாயினும், அடியார்க்கு மிக அணியனாயிருத்தல் மிக நல்லதாகின்றது என்றபடி. "ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்" எனத் தொடங்கும் புறப்பாட்டில்2 ஒளவையார் அதியமானைப் பாராட்டியது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. 371. குறிப்புரை: 'திருக்காளத்தி மலையைத் தமதாகக் கொண்டு ஆளும் தேவராகிய இவரே' என எடுத்துக்கொண்டு உரைக்க. செய்யுளாகலின் சுட்டுப் பெயர் முன்வந்தது. முதல் தேவர் - தலைமைக் கடவுள். எனவே, 'தேவர் பிறர்யாவரும் இவர்தம் பணிக் கடவுளர் என்பது போந்தது. 'இங்ஙனமாகவே - இவர் எல்லாரினும் மேலானவர் - என்பது சொல்ல வேண்டா' என்பது கருத்தாகலின், "எல்லார்க்கும் மிக்கார்" என்றது முடிந்தது முடித்தலாம். 'அன்னரல்லர்' என வருவிக்க. இருத்தல் - அறியாமையுட்பட்டிருத்தல். "இவர் அல்லர் என்று இருக்க வேண்டா" என்றதும், மேலதனை எதிர்மறை முகத்தால் வலியுறுத்தியதேயாம். கவர்தல் - இரண்டு படுதல்; ஐயுறுதல். "கவராதே தொழும் அடியார்" என அப்பரும் அருளிச் செய்தார்.3 ஆதரித்தல் - விரும்புதல். ஆதரித்த தெய்வம் - இட்ட தெய்வம் வேறு வேறு தெய்வங்களை விரும்புதல், 'வேறு வேறு பயன்களை அது அதுவே தரும்' என்னும் எண்ணத்தினாலே யாம். 'அனைத்துப் பயனையும் இவர் ஒருவரே தருதல் உண்மையாகலின், அனைத்துத் தெய்வங்களும் இவர் ஒருவரேயாவர்' என்றார். 'ஆம்' என்பது உயர்திணை ஒருமை யாய் நின்றமையின் பன்மை யொருமை மயக்கமாம். 372. பொழிப்புரை: "நாளை உள என்று" என்பதை முதலிலே கொள்க. 'நாளை - நாளை - என்று தொடர்ந்து வரும் நாள்கள் பல
1. பாட்டு - 94 2. புறநானூறு 3. திருமுறை - 6.61.3.
|