| இம்மாய வாழ்வினையே பேணா(து) இருங்கயிலை அம்மானைச் சேர்வ தறிவு. | | 73 |
373. | அறியாம லேனும், அறிந்தேனும் செய்து செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து பொன்முகலி ஆடுதலும் போம். | | 74 |
உள; ஆகையால், நாம் செய்ய வேண்டு வதை நாளைச் செய்து கொள்ளமுடியும் என்று எண்ணி, (தாம்) மக்கள் பலரும், 'இன்று' என எண்ணப்படும் நாள்களில் உலக மயக்கிலே வீழ்தல் அறிவுடைமையன்று. (ஏனெனில், "இன்றைக்கு இருந்தாரை நாளைக் கிருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லை"1 ஆதலின், மனமே,) நாம் எந்த ஒரு நாளிலும் இந்த நிலையற்ற வாழ்வை விரும்பாமல், பெரிய கயிலாய மலையில் வீற்றிருக்கும் தலைவனைப் புகலிடமாக அடைந்திருத்தலே அறிவுடைமையாகும் - என வேண்டும் சொற்கள் வருவித்து உரைத்துக்கொள்க. 'தவம் ஒன்றே தக்கது' என்பார், தக்கதனை இங்கு "தவம்" என்றார். அஃது இங்கு அதற்குக் காரணமாகிய அறியாமை மேல் நின்றதைப் பின் "அறிவு" என்றது பற்றி அறிக. அன்றறிவாம் என்னாது அறம் செய்த2 என்ற வள்ளுவர் வாய்மொழியும் காண்க, 'தகவன்ற' எனப் பாடம் ஓதுதலும் ஆம். 373. குறிப்புரை: அறியாது செய்யும் வினை 'அபுத்தி பூர்வ வினை' என்றும், அறிந்து செய்யும் வினை, 'புத்தி பூர்வ வினை' என்றும் சொல்லப்படும் செய்து - செய்தலால். செறிதல் - திரளுதல். கொடுமை மிகுதி பற்றித் தீவினையையே கூறினாராயினும் நல்வினையும் உடன் கொள்ளப்படும் பொன்முகலி, திருக்காளத்தி மலையைச் சார ஓடும் யாறு. திருக்காளத்திப் பெருமானது திருவருளால் அவ் யாறு பெற்றுள்ள சிறப்பை உணர்த்தியவாறு. 'நெறிநின்று ஆடுதல்' என இயையும் நெறி நிற்றல், திருமுழுக்காடும் முறைவழி நிற்றல். 'அம்முறைகளுள் தலையாயது சிவவணக்கம் என்றற்கு, "காளத்திநாதன் அடிபணிந்து ஆடுதல்" என்றார்,
1. தாயுமானவர் பாடல் - "சச்சிதானந்த சிவம்." 2. திருக்குறள் - 36.
|