374. | போகின்ற மாமுகிலே, பொற்கயிலை வெற்பளவும் ஏகின் றெமக்காக; எம்பெருமான் - ஏகினால், உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய் விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு. | | 75 |
375. | வேறேயும் காக்கத் தகுவேனே; மெல்லியலாள் கூறேயும் காளத்திக் கொற்றவனே! - ஏறேறும் அன்பா! அடியேற்(கு) அருளா(து) ஒழிகின்ற(து) என்பாவ மேயன்றோ! இன்று. | | 76 |
376. | இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்(கு) என்றும், இளமதியே; எம்பெருமான் - என்றும்என் |
374. குறிப்புரை: "கயிலை வெற்பளவும்" என்பதனால். 'வடக்கு நோக்கிப் போகின்ற மாமுகிலே' என்க. எனவே இது வேனிற் காலத்துத் தென்றலால் வருந்தினவள் கூற்றாம். காலத்தால் இது பாலைத் திணை. "எமக்காக இன்று கயிலை வெற்பளவும் ஏகு; ஏகினால்' என்க. "எமக்கு" என்பது ஒருமைப் பன்மை மயக்கம். எம்பெருமானாகிய உண்டாற்கு என் நோயை வேறு விண்ணப்பம் செய்' என இயைத்து முடிக்க. வேறு - சிறப்பாக 'பொதுவாக நீ விண்ணப்பிக்க வேண்டிய வற்றை விண்ணப்பித்தபின், தனியாகச் சிறந்தெடுத்து விண்ணப்பம் செய்' என்றபடி. உள் உறு நோய் - பிறர்க்கு வெளிப்படுத்தலாகாது, உள்ளே மறைத்து வைக்கப்படுகின்ற நோய், கண்டாய், முன்னிலை யசை. இது மேகவிடு தூது 'உண்ணப்படா நஞ்சை உண்டாற்கு என்னை ஏற்றுக் கொள்ளு தல் ஏலாததன்று' என்பதைக் கூறுக - என்பது குறிப்பு. இஃது உடம்பொடு புணர்த்தல். 375. குறிப்புரை: "கொற்றவனே, அன்பா" என்னும் விளிகளை முதலிற் கொள்க. "தகுவேனே" என்னும் ஏகாரம் தேற்றம். இதன்பின், 'ஆயினும்' என சொல். வருவிக்க. வேறே - சிறப்பாக இஃது அளியளாம் காரணத்தால் அமைந்தது. உம்மை சிறப்பு. 'தகுவேனை' என்பது பாடம் அன்று மெல்லியலாள், உமை, ஏறு - இடபம். 'இன்று அருளாது ஒழிகின்றது' எனக் கூட்டுக. "இன்று" என்பது, 'அருளுவதே உனக்கு என்றும் இயல்பு' என்பதைக் குறித்து நின்றது. ஒழிகின்றதன் காரணத்தை. "ஒழிகின்றது" எனக் காரியமாக உபசரித்தார். இது தலைவி தனது வேட்கையைத் தானே தலைவனிடம் கூறிய. 'வேட்கை முந்துறத்தல்' என்னும் பெருந் திணைத் துறை.1 376. குறிப்புரை: (இளமதி, பெருமான் அணிந்த பிறை பலர், பெருமான் ஊரும் விடையை நோக்கி, 'நீ எம்பக்கல்
1. புறப் பொருள் வெண்பா மாலை.
|