| னுட்காதல் உண்மை, உயர்கயிலை மேயாற்குத் திட்காதே விண்ணப்பஞ் செய். | | 77 |
377. | செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது கையறவும், உள்மெலிவும் யான்காட்டப் - பையவே காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம் போரேறே இத்தெருவே போது. | | 78 |
378. | போது நெறியனவே பேசி,நின் பொன்வாயால் ஊதத் தருவன்; ஒளிவண்டே, - காதலால் கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான் வண்தார்மோந்(து) என்குழற்கே வா. | | 79 |
வருங்கால்மெல்ல நட' எனவேண்டிக் கொள்ளுதல்போல, இவள் பெருமான் அணிந்துள்ள பிறையை நோக்கி வேண்டு கின்றாள், 'இளமதியே, இன்று தொடங்கி, யான் உனக்கு என்றும் பணிசெய்வேன்; என்றும் என்னுள் காதல் உண்மை யினை எம்பெருமானாகிய கயிலை மேயாற்கு விண்ணப்பம் செய்' என இயைத்து முடிக்க. "உள்" என்பது இடப் பெயர். அஃது ஆகுபெயராய் ஆங்கு உள்ள நெஞ்சத்தைக் குறித்தது. திட்குதல் - நாத்தடைப்படுதல். இது, 'திக்குதல்' என வழங்கு கின்றது. பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே. என்ப ஆகலின், அப்பிறைக்கு என்றும் பணிசெய்வதாகக் கூறியதில் புதிது ஒன்றும் இல்லை. 377. குறிப்புரை: கையறவு - செயலற்ற நிலை உள். மெலிவு - மனச் சோர்வு. யான் காட்ட - நான் நேரே புலப்படுத்தற் பொருட்டு. 'இத் தெருவே பையவே போது' என்க. கார் - மேகம். 'தெருவின்கண்ணே' என உருபு விரிக்க. மேலை வெண்பாவின் உரையிற் கூறியபடி. இவள் பெருமான் ஊர்ந்துவரும் விடையை நோக்கி வேண்டினாள். போது - வா; இது 'புகுது' என்பதன் மரூஉ. 378. குறிப்புரை: "ஒளி வண்டே" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. குழற்கு - குழற்கண்; வேற்றுமை மயக்கம். 'பெருமான் தாரினை மோந்து மீண்டு குழற்கண் வந்தால், குழலும் அத்தாரின் மணத்தினைப் பெற்று, அத்தாரினைச் சூடியதுபோல் ஆகும்' என்னும் கருத்தால் அவ்வாறு செய்யு மாறு கூறினாள். இதுவும் அவளது ஆற்றாமையால் சொல்லிய சொல்லேயாகும். ஆகவே, 'அது பயனுடைய செயல்தானா' என்னும் வினா எழவில்லை. போது நெறியன - சென்று திரும்பிய வகையில் நிகழ்ந்த செயல்கள். 'பேசி
|