379. | வா!வா! மணிவாயால் மாவின் தளிர்கோதிக் கூவா திருந்த குயிற்பிள்ளாய்! - ஓவாதே; பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக் கோமான் வர,ஒருகாற் கூவு. | | 80 |
380. | கூவுதலும், 'பாற்கடலே சென்றவனைக் கூடுக'என்(று) ஏவினான் பொற்கயிலை எம்பெருமான்; - மேவியசீர் அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால் தன்பால்பால் வேண்டுதலும் தான். | | 81 |
ஊத' என. பொன், ஒளி இவை 'அழகு' என்னும் பொருளன. 'பொன் போலும் வாய்' என உவமையாக்கலும் ஆம். 'ஊதுதற்குரிய பக்குவத்தில் பல மலர்களைப் பறித்துப் பரிசாகத் தருவேன்' என்க. 'உண்ணத் தருவன், தின்னத் தருவன்' என்பனபோல, "ஊதத் தருவன்" என்பது செயப்படுபொருள் தொக்கு நிற்க வந்தது. 379. குறிப்புரை: "வா வா" என்னும் அடுக்குத் தொடரை, "பிள்ளாய்" என்பதன்பின் கூட்டியுரைக்க. 'மணிவாயால் ஓவாதே தளிர் கோதிக் கொண்டு' என்க. பூ - அழகு. அன்றி, 'பூம்பொழில், மாம்பொழில்' என இயைத்துரைப்பினும் ஆம். வர - வருமாறு. அஃதாவது, 'நின்பொருட்டாக இறந்து படுவாள் ஒருத்தியைக் காக்க வா' எனல். "கூவு" என்பதன்பின் 'அமையும்' என்பது வருவித்து. முடிக்க. 'அவன் பேரருளாளன் ஆதலின் ஒருகாற் கூடவே அமையும்' என்பதாம். அடுக்கு, விரைவு பற்றி வந்தது. பிள்ளைப் பிராணிகளில் குயிலும் ஒன்றாதல் பற்றி, "பிள்ளாய்" என்றாள். "வா இங்கே நீ குயிற் பிள்ளாய்"1 எனத் திருவாசகத்தும் வந்தது. 380. குறிப்புரை: கூவுதல் - அழைத்தல். "கூவுதலும்." என்பதன்பின், 'வர' என ஒரு சொல் வருவிக்க. "மேவிய கீர்" என்பது முதலாகத் தொடங்கி, "எம்பெருமான்" என்பதை, "வேண்டுதலும்" என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. புலிக்காலன் - வியாக்கிர பாத முனிவர். பாலன் - அவர் மகன். உபமன்னிய முனிவர் "பாலன்பால் தன்பால்" என்பவற்றில் "பால்" ஏழன் உருபு. 'பாலன் பசிக்குப் பால் வேண்டப் பாற்கடலையே அழைத்துக் கொடுத்த பெருமான் கயிலைப் பெருமான்' என அவனது அருளையும், ஆற்றலையும் வியந்து கூறியவாறு. உபமன்னிய முனிவர்க்காகச் சிவபெருமான் பாற்கடலை அழைத்துக் கொடுக்க, அதனை அவர் உண்டு மகிழ்ந்த வரலாற்றைக் கோயிற் புராணத்துட்2 காண்க. "பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்"3 என்னும்
1. குயிற் பத்து - 8. 2. வியாக்கிர பாதச் சருக்கம் - 24, 25. 3. பாட்டு - 297.
|