381. | தானே உலகாள்வான்; தான்கண்ட வா,வழக்கம் ஆனான்மற் றார்இதனை அன்(று)என்பார் - வானோர் களைகண்டதா னாய்நின்ற காளத்தி யாள்வார் வளைகொண்டார்; மால்தந்தார்; வந்து. | | 82 |
382. | வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத் தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ! இடந்தார், இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற் கிடந்தார் வலியெலாங் கெட்டு. | | 83 |
383. | கெட்ட அரக்கரே, வேதியரே, கேளீர்கொல்! பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக் கலந்தரனார் காளத்தி யாள்வார்மேற் சென்று சலந்தரனார் பட்டதுவும் தாம். | | 84 |
திருப்பல்லாண்டினையும், "அத்தர் தந்த அருட்பாற் கடல் உண்டு - சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்"1 என்னும் திருத்தொண்டர் புராணத்தையும் காண்க. 381. குறிப்புரை: "வானோர்" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கணைகள் - பற்றுக்கோடு, முன்னர்ப் பன்மையாகக் கொள்ள வைத்துப் பின் மூன்று இடங்களில் "தான்" என ஒருமையாகக் கூறியது. 'இப்பெருந்தகைமை யுடையார் தமக்கு அடாதது செய்தார்' என்பது தோன்றுதற்கு, 'எனைத்துணைய ராயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல்'. என்பதிற்போந்த பால் மயக்கம்போல. தான் கண்ட வா - தான் கருதியவாறே. வழக்கம் - தனது இயற்கை. ஆனான் - நீங்கான் 'அன்று' எனல், 'இது தகாது' என இடித்துரைதல். 382. குறிப்புரை: ஓர் அரக்கனார், இராவணன். ஆர் விகுதி இழிவு குறித்து நின்றது. இடந்தார் - பெயத்தார். 'அடார்' என்பது இங்கு "இடார்" என வந்தது. 'பாறங்கல்' என்பது பொருள், முன்னதற்கு முன் வெண்பாவில், வணங்கினார்க்கு அருளல் சொல்லப்பட்டது. இவ்வெண்பாவில் தருக்கினாரைத் தெறல் சொல்லப்பட்டது. அந்தோ, இரக்கக் குறிப்பு. 383. குறிப்புரை: கெட்ட - தீமையை மிக உடைமையால், பெருமையை முற்ற இழந்த. வேதியர். மீமாஞ்சை மதத்தவர் அவர் தாருகாவன முனிவர் போன்றவர். பட்டது - அசுரர் பலர்
1. திருமலைச் சருக்கம் - திருமலைச் சிறப்பு - 15.
|