பக்கம் எண் :

273கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

384.தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல்! சார்வரே!
காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்!
தூரத்தே போவார் தொழுது.

85

385.தொழுது, நமனும்தன் தூதுவர்க்குச் சொல்லும்,
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால், பணிந்தகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று.

86


அழிந்தமை. 'பண்டு ஒருநாள் சலந்தரனார், (முன்பு பலர்) பட்டதுவும் ஓராது, அரனார்மேல் ஒட்டக் கலந்து சென்று தாம் பட்டதுவும் கேளீர் கொல்? என இயைத்து முடிக்க. ஒட்டுதல் - வஞ்சினம் கூறிப் போர் தொடங்குதல், கலந்து - உடன்பட்டு, 'சலந்தரன்' என்னும் அசுரன் பட்டதாவது, சக்கரத்தால் தலை அறுபட்டு வீழ்ந்தது, எல்லாரையும் வென்று செருக்குமிக்க சலந்தராசுரன் சிவபெருமானை வெல்லக் கருதி அவர்மேல் சென்றபொழுது, அவர் மண்ணிற் கீறிய சக்கரத்தை எடுத்துத் தலையறுப்புண்டு அழிந்த வரலாற்றைக் கந்த புராணத்துட்1 காண்க. சிவபெருமானை - இயல்பாகவே ஏலாது எதிர்க்கும் வேதியரை நோக்கிக் கூற வந்தவர், அசுரருட் சிலரும் அத்தன்மையர் ஆதல் பற்றி, அவர்களையும் உடன் நோக்கிக் கூறினார். அரனாராகிய 'காளத்தி ஆள்வார்மேல்' என்க.

384. குறிப்புரை: ஈற்றடியை இறுதியிற் கூட்டுக. அங்ஙனம் கூட்டுதற்குமுன் 'காலனார் பத்தர்க்கு அருகு அணையார்; தொழுது தூரத்தே போவார்' என இயைத்துக்கொள்க. காம்பு - மூங்கில். 'அதினின்றும் விளைந்த நல்ல நெல்லையுடைய கயிலை' என்க. "போவார்" என்பதன்பின், 'ஆம்! மும்பு தான் பட்டதைச் சிறிதாயினும் அஹியாதுபோவாரல்லர்; அதனால் அருகு சார்வாரோ' என ஏதுக் கூறி முடிக்க. முன்பு பட்டது, மார்க்கண்டேயர்மேற் சென்று உதையுண்டது இவ்வரலாறும் கந்தபுராணத்துட்2 கூறப்பட்டது. 'கொல்' என்னும் ஐய இடைச் சொல் எதிர்மறை வினையோடு பொருந்த உடன்பாடாய தேற்றத்தை உணர்த்திற்று. "சார்வரே" என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர்மறைப் பொருளைத் தந்தது. "காலனார்" என்னும் பன்மை இழிவு குறித்து நின்றது. இழிவாவது மார்க்கண்டேயர் மேல் தன் நிலைமையறியாது சென்று கெட்டது.

385. குறிப்புரை: "நமனும்" என்பதை முதலிலும், "சொல்லும்" என்பதை ஈற்றிலும் வைத்துரைக்க. அங்ஙனம் உரைக்குங்கால்,


1. அசுர காண்டம் - ததீசி உத்தரப் படலம்.
2. அசுர காண்டம்.