390. | கூடி யிருந்து, பிறர்செய்யுங் குற்றங்கள் நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி வடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில், அடகயில, ஆர்முதை விட்டு. | | 91 |
அகப் பொருள் நிகழ்ச்சிகளில் தலைவனைப் பிரிந்து ஆற்றாத தலைவி தலைவனது வருகை குறித்துப் பார்க்கும் குறிகளுள் கூடல் இழைத்தல் ஒன்று, அஃதாவது, கண்ணை மூடி யிருந்து நிலத்தில் மணலின் மேல் வலக்கைச் சுட்டு விரலால் ஒரு வட்டம் வரைதல், வரைந்துவிட்டு விழித்துப் பார்க்கும் பொழுது வட்டத்தின் இரு முனைகளும் ஒன்று கூட, வட்டம் குறையின்றி நன்கு அமைந்திருப்பின் 'தலைவன் விரைவில் வந்து சேர்வான்' என்பதும், இருமுனைகளும் வேறு வேறாய்ப் போய்விட்டிருப்பின் 'தலைவன் அண்மையில் வாரான்' என்பதும் முடிவுகளாகும். இம்முடிவுகளில் அக்கால மக்கட்கு முழு நம்பிக்கையிருந்தது. இருமுனைகளும் ஒன்று கூடும்படி வரைதலால் அந்த வட்டத்திற்கே 'கூடல்' என்பதும், அதனை வரைதற்கு, 'கூடல் இழைத்தல்' என்பதும் பெயர்களாயின. 'நீடு நெஞ்சுள் நினைந்து,கண் நீர்மல்கும் ஓடும் மாலினொடு, ஒண்கொடி மாதராள் மாடம் நீள்மரு கற்பெரு மான்வரின் கூடு நீஎன்று கூடல் இழைக்குமே.'1 என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார். ஆகவே, இப்பாட்டு காளத்திப் பெருமான் மேல் காதல் கொண்டு ஆற்றாளாய தலைமகள் ஒருத்தி, 'அவன் முற்றறிவும், பேரருளும் உடையன் ஆதலின் தன்னைக் காதலித்தார் முன் தான் விரைய வந்து அருள் பண்ணுவான்' - என்னும் உறுதிப்பாடு உடையளாய், 'ஆயினும் அதனைக் கூடல் இழைத்துக் காண்போம்' எனக் கருதி அங்ஙனம் இழைக்கின்றாள் கூற்றாயிற்று. ஆயினும், உண்மையில் இஃது ஆசிரியரது பேன்பினை இம்முறையால் வெளிப்படுத்தில கூற்றேயாதல் தெளிவு. இருவேறிடங்களில் விலகியுள்ளவர் விரைய ஓரிடத்தில் ஒன்று கூடுதலை அறிவித்தற்கு, இருமுனைகள் வேற்றுமை தோன்றாது ஒன்று கூடும் வட்டம் மிகச் சிறந்த குறியாயிற்று. 390 - குறிப்புரை: "இருந்து, நாடி" என்னும் எச்ச வினைகளால் புறங்கூறுவாரது இயல்பினை விளக்கியவாறு "தம் குற்றங்கள் நாடாதே" என்பதனை முதற்கண் வைத்து உரைக்க. 'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ, மன்னும் உயிர்க்கு.'2
1. திருமுறை - 5.88.8. 2. திருக்குறள் - 190.
|