பக்கம் எண் :

277கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

391.விட்டாவி போக, உடல்கிடந்து வெந்தீயிற்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம்
கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச்சென் றேத்த மனம்.

92

392.மனம்முற்றும் மையலாய், மாதரார், தங்கள்
கனம்உற்றும் காமத்தே வீழ்வர், - புனமுற்(று)
இனக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
றனக்குறவு செய்கலா தார்.

93


என்னும் குறளுக்குப் பரிமேலழகர், 'தம் குற்றங்களில் பிற குற்றங்களைக் காணாது, புறங்கூறலாகிய அந்தக் குற்றத்தைக் கண்டாலே போதும்' என்பது பட உரைத்தமையும் இங்கு நோக்கத்தக்கது. நாடுதல் - ஆராய்தல். ஆராயுங்கால் சிலரைப் பற்றிப் புறங்கூறப் பொருள் கிடைக்காமலே போகலாம் அப்பொழுது அவர்கட்கு அது பற்றித் துன்பமும் உண்டா கலாம் என்பது பற்றி, "நாடி பாடி" என்றார். "ஏத்தாதே வாழ்ந்திடுவான்" என்றது,காலம் முழுவதையும் இப்படிப் பட்ட செயல்களிலே கழித்தலைக் குறித்தது. வான் ஈற்று வினையெச்சம் இங்குத் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது. வேண்டுதல் - விரும்புதல். அடகு - இலை அயிலுதல் - உண்ணுதல். 'அமுதை விட்டு அடகு அயிலல்' என்பது, 'கனி யிருப்பக் காய் கவர்தல்' என்பதனோடு ஒத்த ஒரு பழமொழி "அயில" என்பது 'உண்பார்களாக' என அகர ஈற்று வியங்கோள். "அயில்வார்களாக" என்றது, 'அயில்கின்றவர் களோடு ஒத்த அறிவினர்தாம்' என்றபடி 'ஏத்தாதே வாழ்ந்திடச் சிலர் விரும்பு வார்களாயின், அவர் அமுதை விட்டு அடகு அயில்வார்களாக' என்க. இதனால், 'திருவருள்வழி வராத இன்பம் இன்பமன்று' என்பது கூறப்பட்டது.

391 - குறிப்புரை: 'ஆவி விட்டுப் போக' என மாற்றிக் கொள்க, "உடல்" எனப் பின்னர் வருதலால், விடுதல், உடலை விடுதலாயிற்று. பட்டு - பொருந்தி. ஆங்கு - அதன்கண். பார்த்தல், பல இடங்களில் பலமுறை நிகழக் காண்டல். 'பார்த்திருந்தும் (மக்களுடைய) மனங்கள் சென்று வள்ளலை ஏத்த ஒட்டா' என இயைக்க. ஒட்டுதல் - ஒருப்படுதல். ஆம், அசை. 'இஃது அவர்களது வினையிருந்தவாறு' என்பது குறிப்பெச்சம் இவ் எச்சத்தால், இரங்குதல் பெறப்பட்டது. "பார்த்திருந்தும்" என்றது, 'காட்சியளவையானே உணர்ந்தும்' என்றபடி "சுடலை சேர்வது சொற்பிரமாணமே" என அருளிச் செய்தார் அப்பர்.1

392 - குறிப்புரை: "புனம் முற்றும்" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. அங்ஙனம் உரைக்குங்கால் "தாழ்ந்து" என்பதை



1. திருமுறை - 5.90.4.