பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை278

393.தாழ்ந்த சடையும், தவளத் திருநீறும்
ழ்ந்த புலிஅதளும், சூழ் அரவும், - சேர்ந்து
நெருக்கி, வானோர்இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க்(கு)
இருக்கும்,மா கோலங்கள் ஏற்று.

94

394.ஏற்றின் மணியே அமையாதோ! ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ! - ஆற்றருவி

"மையலாய்" என்பதன் பின் கூட்டி அவ்விரண் டையும் "வீழ்வர்" என்பதற்கு முன்னே கூட்டுக. புனம் முற்று இனக் குறவர் - தினைப் புனங்களில் நிறைந்துள்ள, கூட்டமான குறவர், தன். சாரியை - உறசெய்தல், தங்களை ஆளாக்கிக் கொள்ளுதல். கனம் - சுமை. 'சுமையாக உற்றும்' என ஆக்கம் விரிக்க, சுமையாக உறுதலாவது உண்டியும், உறையுளும், மருந்தும் ஆகியவற்றால் புறந்தருதலேயன்றி, ஆடை அணிகலங்களால் சிறப்புச் செய்தலும் கடமையாகி விடுதல். 'மாதாரர் கனம் ஆக' என இயையும் "தங்கள்" என்றது உறவு செய்கலாதாரை. 'தங்கட்கு' என நான்காவது விரிக்க. தாழ்தல் - அழுந்துதல். "மனம் முற்றும் மையலாய்" என்றது, 'அறிவை முற்றிலும் இழந்து' என்றபடி.

'மக்களே மணந்த தாரம் அவ்வயிற் றவரை ஓம்பும்
சிக்குளே அழுந்தி, ஈசன் திறம்படேன்.1

என்னும் அப்பர் திருமொழியைக் காண்க. 'அஃது உலகியலின் இயல்பினை விரித்தது' என்பது உணரமாட்டாதார், 'அவர் தாமே மக்களையும், தாரத்தையும் உடையராய் இருந்தார்' எனக் கூறிக் குற்றப்படுவர் 'உலகியலை யான் மேற் கொள்ளா தொழியினும் உடல் ஓம்பலை ஒழிய மாட்டாமையின் உலகியலில் நின்றாரோடு ஒத்தவனாகின்றேன்' என்றபடி. "இனக் குறவர் ஏத்தும்" என்றது, கல்லா மாக்களாகிய குறவாரயினும் முன்னைத் தவத்தால் கயிலை யருகில் வாழப் பெற்றுச் சிவனை ஏத்துகின்றனர்; 'கற்றறிந்தேம்; நல்லொழுக்கம் உடையேம்' எனச் செருக்குவார் அது செய்யாது, காமத்தே வீழ்கின்றார் - என்பது தோன்றுதற்கு.

393. குறிப்புரை: 'சடை முதலியன காளத்தி ஆள்வார்க்கு மா கோலங்களாக ஏற்று இருக்கும்' என இயைத்து முடிக்க. 'வானோர் (தம்முள்) நெருக்கிச் சேர்ந்து இறைஞ்சும்' என்க. 'கோலங்களாக' என ஆக்கம் விரிக்க. ஏற்று - ஏற்கப்பட்டு சிவபிரானது திருக்கோலத்தை வருணித்தவாறு. தவளம் - வெண்மை. அதள் - தோல்.

394. குறிப்புரை: ஈற்றடியை முதலிலே கொண்டு, அதன்பின், 'ஆற்று அருவி... எம்பெருமான்' என்பதை வைத்து உரைக்க. ஏறு - இடபம்.


1. திருமுறை - 4.79.2.