| கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத் தெம்பெருமான் என்மேற் படைவிடுப்பாற்(கு) ஈங்கு. | | 95 |
395. | 'ஈங்கேவா' என்றருளி, என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல், நீவந்து நின்றாலும் - தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய்,நான் நல்ல பணிகின்ற வண்ணம் பணி. | | 96 |
பகற் காலத்தில் வெளியே சென்று மேய்கின்ற ஆன் நிரைகள் மாலைக் காலத்தில் ஊரை அடையும் பொழுது எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒலிக்கும். அவ்வொலி இராக்காலத்தின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் ஆதலின், தலைவரைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவியர்க்கு அது வருத்தத்தை மிகுவிக்கும். அதனால், ஆற்றாமை யுடைய தலைவியாரால் வெறுக்கப்படும் பொருள் களுள் காளைகளின் கழுத்தில் உள்ள மணியும் ஒன்றாம். அம்முறைமை பற்றி, வீதியில் திருவுலாப் போதுகின்ற சிவபெருமானது இடபத்தின் கழுத்தில் ஒலிக்கும் மணியையும் அவர்மேற் கொண்ட காதலால் வருந்தும் தலைவி வெறுத்துக் கூறினாள். 'எம்பெருமானது ஏற்றின்' என ஆறாவது விரித்தும், 'அவனது ஈர்ஞ் சடைமேல்' என ஒருசொல் வருவித்தும் உரைக்க. "மணியே" என்னும் ஏகாரம் பிறவற்றினின்றும் பிரித்தலின் பிரிநிலை. அமையாதோ - போதாதோ. கங்கை நீரால் சடை ஈர்ஞ்சடை (குளிர்ந்த சடை) யாயிற்று. ஏற்றின் மணியைவிட, வெண்மதியையே பெரிதும் வெறுத்தாள். படை - ஐங்கணை. அவற்றை விடுப்பவன் மன்மதன். அவனுக்கு உதவி செய்வன ஏற்றின் மணியும், ஈர்ஞ்சடைமேல் வெண்மதியும். "ஈங்கு" என்றது, 'வாழ் இடமே மன்மதனது போர்க்களமாகிவிட்ட இந்த இடத்தில்' என்றபடி. ஆற்று அருவி - ஆறுபோலப் பாய்கின்ற அருவிகள். கல் - பாறைகள். ஆர்த்தல் - ஒலித்தல். "எம்பெருமான்" என்பதை ஆறன் உருபேற்றதாகக் கொள்ளாது, விரியாகக் கொண்டு, 'நும் ஏற்றின்' எனவும், 'நும் சடைமேல்' எனவும் உரைப்பினும் ஆம். 395. குறிப்புரை: 'தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய், நீ என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல் (நின்று,) - ஈங்கே வா - என்று அருளி வந்து நின்றாலும், நான் நல்லவாறு பணிகின்ற வண்ணம் பணி' எனக் கூட்டி ஓரோர் சொல் வருவித்து முடிக்க. அடுதல் - போக்குதல். "அருளி" என்னும் எச்சம், 'நடந்து வந்தான், ஓடி வந்தான்' என்பவற்றிற்போல வருதல் தொழிலோடு
|