396. | பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா கணியாது காலங் கழித்தேன்; - அணியும் கருமா மிடற்றெம் கயிலாயத் தெங்கள் பெருமான தில்லை பிழை. | | 97 |
397. | பிழைப்புவாய்ப் பொன்றறியேன்; பித்தேறி னாற்போல் அழைப்பதே கண்டாய் அடியேன்; - அழைத்தாலும் என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி மன்னா தருவாய் வரம். | | 98 |
உடன் நிகழும் அடையாய் வந்தது. வந்து - எதிர் வந்து. மனத்தில் நீங்காமல் நிற்றல். இடையறாது நினைத்தலால் ஆம் நினைவு பாவனையாகலின், நேர்வருதல் உண்மையாகக் கொள்ளப்படும். 'கருணை மிகுதியால் நீ நேர்வந்து நிற்பினும், அங்ஙனம் நிற்கும் பொழுது பணிய வேண்டிய முறைகளை நான் அறியேன். அதனால், அதனையும் நீயே அறிவித்தருளல் வேண்டும்' என்றடி. "தொண்டனேன் பணியுமா பணியே"1 என்றது இப்பொருட்டாயும் நிற்கும். "காண்பார் ஆர் கண்ணு தலாய் காட்டாக்காலே"2 என்றமையும் அறியற்பாற்று. ஈற்றடி, மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. 'படுகின்ற' எனப் பாடம் ஓதி, 'நல்ல செயல்களைப் பொருந்துகின்ற வண்ணம்' என உரைப்பினும் ஆம். 396. குறிப்புரை: 'பாவியேன், இவனை முன் பணியாது, கணியாது வாளா காலங் கழித்தேன். அதனால், எங்கள் பெருமானது பிழை இல்லை' என இயைத்து முடிக்க. கணித்தல் - எண்ணுதல்; பலமுறை நினைத்தல். செய்யுளாகலின், "இவன்" என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது. அணிதல் - அழகு செய்தல். பெருமானது பிழையாக ஒன்றேனும் இல்லை' என்றதனால். 'எல்லாம் எனது பிழையே' என்றதாயிற்று. இக்கருத்தினைப் பட்டினத்து அடிகள், "பாவிகள் தமதே பாவம்" எனவும், "அறுசுவை அடிசின் திருப்பப் புசியா தொருவன் பசியால் வருந்துதல் - அயினியின் குற்றம் அன்று"3 என்பது முதலிய உவமைகளாலும் விளக்கியரு ளுதல் காண்க. 397. குறிப்புரை: பிழைப்பு - குற்றம் செய்தல். இது, 'பிழைத்தல்' எனவும் வரும், வாய்ப்பு -பொருந்துதல். இவை இரண்டும் ஒன்றற்கு ஒன்று மறுதலையாய் நேர்மையினின்று விலகுதலையும், நேர்மையில்
1. திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா - 1.2. 2. திருமுறை - 6.95.3. 3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 16.
|