398. | வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும் பரமா,உன் பாதார் விந்தம் - சிரம்ஆர ஏத்திடும்போ தாகவந்(து) என்மனத்தில் எப்பொழுதும் வாய்த்திடுநீ; வேண்டேன்யான் மற்று. | | 99 |
399. | மற்றுப் பலபிதற்ற வேண்டா, மடநெஞ்சே! கற்றைச் சடையண்ணல், காளத்தி - நெற்றிக்கண் |
நிற்றலையும் குறிக்கும். இத்தொழிற் பெயர்கள் ஆகுபெயராய், அச்செயல்களால் விளையும் செயப்படு பொருள்களை உணர்த்தும். இவை, நூல்களில் சொல்லப்பட்ட விதி விலக்குக்களை இங்குக் குறித்தன. 'பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்'1 என ஆளுடை அடிகளும் அருளிச் செய்தார். 'இவற்றுள் ஒன்றையும் அறியேன் என்க. அழைத்தல் - விரித்தல். அஃதாவது 'அப்பா, ஐயா, ஆண்டானே, கடவுளே' என்றாற் போலக் கூப்பிடுதல். 'அஃதொன்றை மட்டுமே நான் அறிவேன்' என்பதாம். 'அடியேன் செய்வது அழைப்பதே' என ஒரு சொல் வருவிக்க. "அழைத்தாலும்" என்றது, 'அஃது ஒன்றையே நான் செய்தாலும்' என்றபடி. ஆதரவு - அன்பு. 'அறிவிலனாயினும், அன்புடையன' எனக் கொண்டு இரங்கியருளல் வேண்டும் என்றபடி. கண்டாய், முன்னிலையசை. 398. குறிப்புரை: "யான் வேண்டும் வரமாவதெல்லாம்' என்க. "வட கயிலை மன்னும் பரமா" என்பதை முதலிற் கொள்க. "ஆவதெல்லாம்" என்பது ஒருமைப் பன்மை மயக்கம். சிரம் ஆர - தலை ஆர; என்றதனால். 'வணங்கி' என்பது வருவிக்க. ஆர்தல் - பயனால் நிரம்புதல். "தலையாரக் கும்பிட்டு"2 என அப்பர் பெருமானும் அருளிச்செய்தார். "ஆக" என்னும் செயவென் எச்சம், 'பொழுது சாய வந்தான்' என்பது போல அக்காலத்தை உணர்த்தி நின்றது. "எப்பொழுதும்" என்றது. 'எத்தனை முறையாயினும்' என்றபடி, "நீ" என்பதன்பின், "எல்லாம்" என்ற எழுவாய்க்குப் பயனிலையாகிய 'அதுவே' என்பது வருவிக்க. மற்று - பிற வரங்கள், 'மாற்றுயான் வேண்டேன்' என மற்றுக. வாய்த்தல் - நேர்படுதல் 'வைத்திடு' என்பது பாடம் அன்று. 399. குறிப்புரை: "மற்றுப் பல பிதற்ற வேண்டா" என்பதை இறுதிக்கண் கூட்டி யுரைக்க. மடமை - அறியாமை. அஃதாவது, 'பிறவற்றைச் சொல்லுதலால் பயன் உண்டாகும்' எனக் கருதுதல்.
1. திருவாசகம் - போற்றித் திருவகவல் - 219. 2. திருமுறை - 6.31.3.
|