பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை282

ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.

100

திருச்சிற்றம்பலம்

அது பிழையாதல் பற்றி அவற்றை, பிதற்று தலாகக் கூறினார். 'காளத்தி அமுது' என இயையும். அமுது போல்வானை "அமுது" என்றது உவம ஆகுபெயர் ஆராமை - நிரம்பாமை; தெவிட்டாமை. அஞ்செழுத்தின் சிறப்பு மேல் இரு வெண்பாக்களில்1 சொல்லப்பட்டது சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா" எனத் தொடங்கியவர், திருநாம அஞ்செழுதத்தைச் சோராமல் எப்பொழுதும் சொல் வதில் முடித்தருளிய அருமை அறிந்து பயன் கொள்ளத் தக்கது.

கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி முற்றிற்று

* * *


1. 39, 40.