பக்கம் எண் :

285திருஈங்கோய்மலைஎழுபது

404.அரியும், உழுவையும், ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே, கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு.

5

405.ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே, நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.

6

406.இடுதினைதின் வேழங் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே, ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.

7


பிளிறுவதாயிற்று. 'அன்பின்முன் அச்சம் நில்லாது' என்பதை, "அச்சம் - தாய் தலையன்பின் முன்பு நிற்குமே"1 என்னும் பெரிய புராணத் தாலும் அறிக. கதம் - கோபம், 'ஈங்கோய் மலை வாழ் அஃறிணை யுயிர்களும் அன்பு வாழ்க்கை வாழ்கின்றன' என்பதாம், மை அடுத்த - கருமை நிறம் பொருந்திய.

404. குறிப்புரை: உழுவை - புலி, ஈண்டுதல் - திரளுதல். பரி இடுதல் -நடத்தல். நடத்தலைக் கூறியது, அவை வன்குணம் இன்றி அன்புடையன ஆதலைக் குறித்தற்கு. எனவே, "பரிஇட்டு" என்றது, 'மெல்ல நடந்து' என்றதாம். சொரிதல் இலிங்கத்தின்மேல். எரி ஆடி, சிவன். உகத்தல் - விரும்புதல். 'ஈங்கோய் மலையில் கொடு விலங்குகளும் தம் தன்மை நீங்கி சிவபக்தியுடன் திகழ்கின்றன' என்பதாம். கூற்றம் - யமன். திரியாமல் - தன் அடியாற்மேற் செல்லாதபடி. செற்றான் -அழித்தான், 'அத்தகையோன் இடம் ஈங்கோய்மலை என்றார். சிலம்பு - மலை. "செற்றான்" என்றாராயினும், 'செற்ற அவன்' என்பது கருத்தாகக் கொள்க.

405. குறிப்புரை: 'ஆளியைத் தொடர்ந்து போய்ப் பற்றுதற் பொருட்டு அதனை அரி தொடர' என்க. அரி - சிங்கம். சிங்கத்தைக் குறவர் தொடர்ந்தனர். தொலைவில் இருந்து அம்பால் எய்யக் கருதியவர் அருகிலே சென்று வில்லாலே புடைத்தனர். இஃது அவர்தம் ஆற்றல் மிகுதியால் ஆயது. இடு சிலை - கீழே போகடும் வில். கோள் - அகப்படுத்துதல்.

406. குறிப்புரை: இடு தினை - பயிரிடப்பட்ட தினை, வேழம் - யானை. 'வெடிபடு கல்' என இயையும். வெடிபடுதல் - வேகமாக


1. எறிபத்தர் புராணம் - 24.