410. | ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள் நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக் குணம்மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே, வானோர் குணமருட்டுங் கோளரவன் குன்று. | | 11 | 411. | எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் குற்றதெனக் கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே, தூங்கெயில்கள் சென்றன்று வென்றான் சிலம்பு. | | 12 | 412. | ஏழை இளமாதே, என்னொடுநீ போதென்று கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ |
அவ்வண்டுகளின் செயலைப் பார்த்து. மருங்கு - வண்டுகளின் பக்கத்தில். பூ - அழகு. மயிலி - மயில் வாகனத்தை யுடையவன். 410. குறிப்புரை: 'பிடி ஊடி உறங்க' என மாற்றிக் கொள்க. "ஊடி உறங்க" என்றதனால். உறங்குதல், பொய்யாக உறங்கு தலாயிற்று. "கயிறு" என்பதை, "உறங்க" என்பதன் பின்னர்க் கூட்டுக. 'நாடிக் கொணர்ந்து' என, நாடுதல், அதன் காரியமும் உடன்தோற்றி நின்றது. நயந்து - இனிமை காட்டி. குணத்தால் மருட்டிக் கொண்டாடும்' என உருபு விரித்துரைக்க. குணத் தால் மருட்டுதலாவது, 'நின்னிற் சிறந்த பிடியில்லை' என்பது போல அதன் இயல்பைப் புகழ்ந்து, அப்புகழ்ச்சியில் அதனை மயங்கச் செய்தல். "வானோர் குணம்" என்பதில் "குணம்" என்றது அவர்கட்கு இயல்பாய் உள்ள அறிவினை. அதனை மருட்டுதலாவது, அவர்களால் அளந்தறியலாகாத அளவு, ஆற்றல் முதலியவற்றை அறிந்து வியக்கச் செய்தல். கோள் அரவம் - கொடிய பாம்பு. 'அதனை அணியாக அணிந்தவன்' என்க. 411. குறிப்புரை: "கன்னி மான்" என்பதில் இரண்டன் உருபு விரித்து அதனை முதலிற் கூட்டிப் பின்னரும் 'கன்னி மானே' என விளியாக்குக. கன்னி - இளமை. பைய - மெல்ல. "பாலனை" என்றது கைச் செய்கையை. தூங்கு எயில்கள் - இயங்கும் கோட்டைகள்; அவை முப்புரங்கள். சென்று - வினை மேற் சென்று, மானைக் கொல்லக் கணையை வில்லில் வைத்துத் தொடுத்த குறவன் அதன் பார்வை தன் இல்லக் கிழத்தியின் பார்வைபோலத் தோன்றுதலைக் கண்டு அதன் மேல் அன்பு உண்டாகப் பெற்று அதனை இன்சொற் சொல்லிப் போக விடுத்தான். இது தலைவனிடத்துத் தோன்றிய. 'ஒப்புவழி யுவத்தல்"1 என்னும் மெய்ப்பாடு. 412. குறிப்புரை: ஏழை இள மாது - யாதும் அறியா இளம்பெண். இவள் விளையாடும் சிறுமி. 'இவள் யானை வருதலைக் கண்டு
1. தொல் - பொருள் - மெய்ப்பாட்டியல்
|