| வினைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே, நந்தம் வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு. | | 13 |
413. | ஏனம் உழுத புழுதி இன மணியைக் கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல் இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே, நம்மேல் மறுக்கங்கள் தீர்ப்பான் மலை. | | 14 |
414. | ஏனங்கிளைத்த இனபவள மாமணிகள் கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே, நம்மேல் வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு. | | 15 |
நடுங்கினாள்; அப்பொழுது முதுவேடன் இவளது நடுக்கத்தைத் தீர்த்தான். என்க. கூழை - நிமிர்ந்து நிற்கலாற்றாது மெலிந்து குனிந்து நடக்கும் தன்மை. 'இத்துணை முதியனாயினும் யானையை அடக்கினான்' என்பது கருத்து. வேழம் - யானை. வால் வீட்டுதல், வாலையறுத்தல். குறும்பு செய்தலை 'வாலாட்டுதல்' என்றும், குறும்பை அடக்குதலை, 'வாலையறுத்தல்' என்றும் கூறுதல் உலக வழக்கு. வேழ வினை; மதத்துத் திரிதல். அதற்கு வாலையறுத்தலைச் செய்தல், அதனை நிகழ வொட்டாமற் செய்தால், 'உடன் கொண்டு' போய்' என ஒருசொல் வருவிக்க. உடன் கொண்டு சென்றது, அவள் நேரில் காணுதற்பொருட்டு வினைக் குவால் - கன்மக் குவியல்; இது சஞ்சிதம். அதனை விட்டுவித்தலாவது, தனது திருநோக்கால் எரித்தல். பின்னிரண்டடிகள் 'மடக்கு' என்னும் சொல்லணி பெற்றன. 413. குறிப்புரை: 'புழுதியில் கிடக்கும் மணி' என்க. மணி - மாணிக்கம் "இன மணி" என்பதை 'மணி இனம்' என மாற்றிக் கொள்க. இனம் - கூட்டம். என்ன - என்றே மருளும் படி. கூனல் இறுக்கம் - முகமும், முழங்காலும் ஒருங்கு சேரும்படி உடல் வளைந்து கையால் கட்டிக் கொண்ட இறுக்கம். இது குளிரால் நேர்ந்தது. கதிர் - பகலவன் கதிர்கள். பகலவன் கதிர் வெதுப்புதலால் தங்கள் குளிர் நீங்குதலை யறியாத குறச்சிறுவர்கள், காட்டுப் பன்றி நிலத்தைக் கிளறி யதால் உண்டான அப் புழுதிமேல் கிடக்கும் மாணிக்கங்களின் திரளை 'நெருப்பு' என்றே மருள்கின்றார்கள் என்பதாம். இஃது, உதாத்த அணியும், திரிபதிசய அணியும் சேர்ந்த சேர்வை யணி. மறுக்கம் - துன்பம். 414. குறிப்புரை: ஏனம் கிளைத்த - பன்றிகள் உழுததனால் வெளிப்பட்ட கான் - காட்டில். அல் - இரவிலே. எரி - நெருப்புப் போலும் ஒளியை. அஞ்சி - 'நெருப்பு' எனக் கருதி அஞ்சி. இரிய - ஓட. முல்லை அரும்புகள், "யானை இனம் இரிய" எனத்
|