415. | ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில் இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும் ஆளரிதான் ஓட, அரிவெருவும் ஈங்கோயே, கோளரிக்கும் காண்பரியான் குன்று. | | 16 |
416. | ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத் தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில் தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே, சங்கக் குழையிறுத்த காதுடையான் குன்று. | | 17 |
417. | ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே, கோச்சீயம் காண்பரியான் குன்று. | | 18 |
திரிபதிசய அணியும். "முல்லை நகும்" எனத் தற்குறிப்பேற்ற அணியும் சேர்ந்து வந்தது சேர்வையணி. எரி, உவமையாகுபெயர். முல்லை, முதலாகுபெயர். 415. குறிப்புரை: கேழல் - பன்றியை. இது காட்டுப் பன்றி. உயிர் செருத்தல் - கொல்லுதல். கேழல் சிறிதாகலின் ஒருகணையே போதியதாயிற்று. யானை பெரிதாதலின் அதற்கு இருகணைகள் வேண்டப்பட்டன. ஆளரி - ஆளி; யாளி. அஃது யானையோடு ஒருபுடை ஒப்பது ஆதலின் யானை எய்யப் பட்டதைக் கண்டு தான் அஞ்சி ஓடுவதாயிற்று. அஃது ஓடுதலைக் கண்டு சிங்கமும் அஞ்சிற்று. அரி - சிங்கம். கோளரி, இங்கு, நரசிங்கம். "ஒருகணையும்" என்னும் உம்மை முற்று, "இருதலையும்" என்னும் உம்மை சிறப்பு. "செகுத்து" என்றது,'செகுத்தபின்' என்றபடி 'வேடன் எய்ய' எனத் தோன்றா எழுவாய் வருவிக்க. 416. குறிப்புரை: தூங்குவது - தொங்குவது. கடுவன் - ஆண் குரங்கு. இறுத்துக் கொண்டு - ஒடித்துக்கொண்டு. ஓச்சுதல் - ஓங்குதல். தழையால் அடிப்பினும் கொள்ளி அணைவதாகும். மக்களோடு ஒத்திருக்கும் தன்மையால், நெருப்பைக் கண்டால் குரங்கிற்கும் அஞ்சி அதனை அணைக்க முயலும் இயல்பும் குரங்கிற்கும் உளதாகக் கூறப்பட்டது. இலவம் பூவை 'நெருப்பு' என மருண்டது என்றது திரிபதிசய அணி. இறுத்த - தங்கிய. 417. குறிப்புரை: உகிர் - நகம். இற - பிளக்கும்படி. மாடு புக - பிறந்ததனால் ஒழுகிய நீர் இம்மலையிடத்தை அடைய. (அதனால் உண்டான) 'நீடு அருவியை மாச் சீயம் வான் கையால் மிக மடுத்து மனங் களிக்கும்' என்க. சீயம் - சிங்கம். அதன் முன்னங்கால்கள்
|