பக்கம் எண் :

291திருஈங்கோய்மலைஎழுபது

421.கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள்
கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே, ஆல்கீழ்நால்
வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.

22

422.கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கைந் நீட்டும்ஈங் கோயே, - செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.

23


கனிகள் - பலவாகிய பழங்கள். 'கனிகளை ஏந்தி' என இயையும். கல் இளையர் - கற்ற இலைத் தொழிலர். அவராவார், இலைகளைக் கல்லையாகச் செய்தல், தழையாகக் கோத்தல் முதலியவற்றைக் கற்றவர். 'இலையரால்' என்னும் மூன்றன் உருபு தொகுக்கப்பட்டது. தொக்க - தொகுக்கப்பட்ட. நனைய - தேனை உடைய. இலையரால் தொகுக்கப்பட்ட கலம் தொன்னை. உரத்தில் - மார்பிற்கு நேராக. 'கலத்தில், மனைகளில்' என ஏழாவது விரிக்க. ஆய் - தாய்; பழம் விற்பவள். இவளை, 'தாய்' என்றது நாட்டு வழக்கு. 'பலவகைக் கனிகளை யாவரும் எளிதில் காணத் தேனோடு கலந்து மார்பிற்கு நேராகத் தொன்னைகளில் ஏந்தி விற்பவள் தன்னை அழைக்கும் மனைகளில் செல்ல விரும்பி அவற்றை உற்று நோக்குகின்ற ஈங்கோய்' என்றபடி "வா" என்றது இட வழுவமைதி. குரவு - குரா மரத்தின் அரும்பு.

421. குறிப்புரை: கடக் களிறு - மதத்தினையுடைய ஆண் யானை. கண்வளர்தல், உறங்குதல். ஆர்த்தல் - ஆரவாரித்தல். மதயானை உறங்கும் பொழுது வண்டுகள் ஆரவாரித்தல், அதன் மத நீரைத் தான் வேண்டியபடி உண்ணுதலாம். உழுதல், 'உழவு' ஆயினாற்போல, எழுதல், 'எழவு' ஆயிற்று. மடம் - இளமை. இனி, 'சொல்லியதைச் சொல்லுதல்' என்றும் ஆம், கீதம் தெரிந்து உரைக்கும் - இசையையும் உணர்ந்து. அம்முறையிலே பாட்டினையும் பாடுதல். "ஆர்ப்ப உரைக்கும்" என்றது. 'இரண்டும் ஒருங்கு நிகழ்கின்றன' என்பதாம். நால் வேதத்தை நால்வர் முனிவர்க்குச் சிவன் அறிவுறுத்தமை திருமுறைகளிற் பல இடத்தும் சொல்லப்படுவது. "உரைப்பான்" என எதிர்காலத்தாற் கூறியது. 'இது கற்பந் தோறும் நிகழ்வது' என்றற்கு.

422. குறிப்புரை: 'கருவுற்ற காலத்தில் மகளிர்தம் கொங்கை நுனி கறுப்பாகும்' என்னும் வழக்குப் பற்றி, "கறுத்த முலைச் சூற் பிடிக்கு" என்றார். சூல் - கருப்பம். பிடி - பெண் யானை. "பிடிக்கு" என்றதனால், "யானை" என்றது களிற்றியானை யாயிற்று. கார் யானை - கரிய யானை, இஃது இனம் இல் அடை. சந்தம் - சந்தன