பக்கம் எண் :

293திருஈங்கோய்மலைஎழுபது

ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே, நீங்காத
மான்தரித்த கையான் மலை.

26

426.கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் - துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே, நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.

27

427.கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் முல்லைஅங்கண்
பல்லரும்ப மொய்த்தீனும் ஈங்கோயே, மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.

28

428.கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே

அடக்கல். அதனை உட்பருகுதலாவது, தான் பூப்படைந்தமையை மனத்தில் எண்ணுதல். அன்னைக் குடி வரலாறு - தன் தாய், தாய்க்குத் தாய் இப்படிப் பெண்யானை கள் யாவும் கன்றுகளை ஈன்று இனத்தைப் பெருக்கி, வாளாதே இறந்தொழிந்த வரலாறு. (அதனை அறிந்த ஒரு பிடி யானை) அஞ்சி - அவ்வாறு தானும் துன்புற்று வாளா மாய்தற்கு அஞ்சி மாதவும் என்று அருக்கிச் செய் ஈங்கோய் - பெரிய தவத்தை மேற்கொண்டு உண்டி முதலியவைகளை மறுத்து நோற்கின்ற ஈங்கோய் மலை, அருக்குதல் மறுத்தல்.

426. குறிப்புரை: கள்ள - வஞ்சனையையுடைய. அஃதாவது ஒளிந்திருந்து மாக்களைப் பிடிக்கின்ற. முது மறவர் - கிழ வேடர். மா வேட்டை - விலங்கு வேட்டை. கொள் என்று - பிடியுங்கள் என்று. இனம் - பல்வேறு வகையான, கவ் வலை - சிக்க யாக்கின்ற வலைகளைக் கடந்து. பாய்ந்து ஓடுவன மேற் கூறப்பட்ட மாக்கள். 'கல் வலை' என்பது இடைக் குறைந்து நின்றது.

427. குறிப்புரை: கல் - சிறு பாறைகள், 'அவற்றை உடைய புனம என்க. ஐ. சாரியை படர்தல், இங்கு மேய்தலாகச் சொல்லப்பட்டது. தார் - மாலை. அதனை, "போர்த்த" என்றது. 'நிரம்பத் தாங்கி' என்றபடி. புனம், கொல்லை, புறவு - யாவும் முல்லைநிலப் பெயர்கள் புறவின். முல்லை - முல்லை நிலத்துக்கே சிறப்பாக உரிய முல்லைக் கொடிகள். பல் அரும்பு, பற்கள் போன்ற அரும்புகள். "மொய்த்து" என்பதை, 'மொய்ப்ப' எனத் திரிக்க. கொல் அரும்ப - கொலைத் தொழில் தோன்றும் படி. கோல் - அம்பு, "மேய்ந்து, போர்த்து, ஈனும்" என்றது சில சொல் நயங்கள்.

428. குறிப்புரை: பின், "எல்லாக் குரங்கும்" என வருதலின் முதற்கண், 'ஒரு கல்லாக் குரங்கு' என உரைக்க. கல்லாமை, யாதும்