| இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே, மேனிப் பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு. | | 29 |
429. | கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல் வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் - தண்கோ(டு) இளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே, வேதம் விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு. | | 30 |
430. | காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல் கார்க்கொன்றை ஏன்றான் கடறு. | | 31 |
அறியாமை. பளிங்கு - பளிங்குப் பாறை. கனி - அதனுள் தோன்றும் கனியினது நிழலை. ஈண்டி - நெருங்கி. இருந்து - அமர்ந்து கொண்டு 'இருந்து, வல்லே உகிரால் கல் கிளைக்கும்' என்க. வல்லே - விரைவாக. உகிர் - நகம். கிளைக்கும் - கிள்ளுகின்ற. இதுவும் திரிபதிசய அணி. 429. குறிப்புரை: கண் - கண்ணொளி; ஆகுபெயர், "கொண்டு" என்பதை, 'கொள்ள' எனத் திரிக்க. அவிர்தல். ஒளி வீசுதல். மணி - நீலமணி. நாப்பண் நடுவில். கேழல் - பன்றி, "கடுக்கும்" இரண்டில் முன்னது, 'ஒக்கின்ற' என்னும் பொருளையும், பின்னது, 'மிக்குறைகின்ற' என்னும் பொரு ளையும் உடையன. இளம் பிறை சேர்வான் - இளம் பிறை பொருந்திய ஆகாயம். வேதம் விளம்பு இறை - வேதத்தால் சொல்லப்பட்ட இறைமைக் குணங்கள். நீலமணிக் குவியல் இடையே பன்றிக் கொம்பு காணப்படுதலால், அக்குவியல் பிறை பொருந்திய ஆகாயம் போலத் தோன்றுவதாயிற்று. பின் இரண்டடிகள், திரிபணி. 430. குறிப்புரை: "கைத்தலங்கள் காட்ட" என்றது, கைகாட்டி, 'வருக' என்று அழைக்க - என்றபடி. காந்தள் மலர் கைக்கு உவமையாகச் சொல்லப்படுவது ஆதலின் அதன் அசைவு கையை அசைத்தலாகச் சொல்லப்பட்டது. இது தற்குறிப்பேற்றம். கூந்தல் - தோகை. ஏர் - அழகு. கொன்றை மலர் பொன்போல்வது ஆதலின், அதனை உதிர்ப்பது, நடன மாடும் நாடக மகளுக்குப் பரிசாகப் பொன்னைச் சொரிவ தாகக் கூறப்பட்டது. இதுவும் தற்குறிப்பேற்றம். சாய்தல் - வளைதல். இரங்குதல் - மனம் இரங்குதல். இஃது இலக்கணை. என்றதனால் மஞ்ஞை (மயில்) நாடக மகளாதலைப் பெற வைத்தது குறிப்புருவகம். களி - களிப்பு; மகிழ்ச்சி "கை காட்ட,
|