439. | சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத் தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே, இன்பக் குமரன்முது தாதையார் குன்று. |
| 40 |
437. குறிப்புரை: பூ - அழகு யானை, களிற்றியானை. 'மந்தம்' என்பது ஈற்று அம்முக்கெட்டு நின்றது. மந்தம் - மெல்லிய நடை. தண் - குளிர்ச்சி. களிற்றுக்குத் தரப்படும் குளிர்ச்சி. மடம் - இளமை. "கொடுப்ப" என்றது, 'கொடுக்க முயல' என்றபடி. தன் - அதனது. கண் களித்தல், கண்ணில் உவகை நீர் ததும்புதல். களிற்றின் அன்பு நோக்கிப் பிடி கண்களித்தது. பிடி கண்களித்ததைக் கண்டு களிறு ஆரவாரித்தது. கலித்தல் ஆரவாரித்தல், "தான்" என்றது களிற்றியானையை. தேங்குதல் - திகைத்தல். விண் - விண்ணோர். ஆகுபெயர்.
438. குறிப்புரை: "குறமகளிர்" என்பதை முதலில் வைத்தும், 'இளமகளிர் மந்திவாய்க் கொடுத்து' என மாற்றி வைத்தும் உரைக்க. தண் - மென்மை. பிண்டி - தினை மா. கொந்தி - அளைந்து. குறமகளிர் தேன் கலந்த தினைமாவைத் தாங்களே உண்ண, அவருள் இள மகளிர் அங்குள்ள மந்திகளுக்குக் கொடுத்து உண்கின்றார்கள்; இஃது அவர்களது முதுக்குறைவாகும். 'வெற்பின் மகள்' என்பதை, "வெற்பின் மகளிர்" என்றது உயர்வு பற்றி வந்த பன்மை. அன்றிக் கங்கையும். இமவான் மகளாய், 'ஐமவதி' எனப்படுகின்றாள் ஆதலின், அவ்விருவரையும் குறித்ததுமாம். இப்பொருட்கு. 'பாகன், ஒரு பகுதியிற் கொண்டவன்' என உரைக்க.
439. குறிப்புரை: சாரல் - இம்மலையின் பக்கம். தண் - குளிர்ச்சி. அஃதாவது, கண்ணிற்குத் தரும் குளிர்ச்சி. அது வெண்மை, எனவே, மருப்பு யானைத் தந்தமாயிற்று. பிண்டி - மா. இது தினை மா, சேர நன்கு மசிந்து ஒன்றுபட. தருக்கி - மகிழ்ந்து. மது - தேன். வீரத் தமர் - வீரம் உடைய உறவினர்; என்றது, ஆடவரை. இனிது ஆக - மகிழ்ச்சி அடையும்படி. மகளிர் தங்கள் உதவியை நாடாது