பக்கம் எண் :

301திருஈங்கோய்மலைஎழுபது

449.தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறிஆயத் தோடாட - நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே, நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.

50

450.நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர்
இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே, நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.

51

451.நாக முழைநுழைந்த நாகம்போம் நல்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று - நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிஞ்சும் ஈங்கோயே, ஓங்கியசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.

52

452.நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த - மேகங்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே, ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.

53


449. குறிப்புரை: ஓகை செறி ஆயம் - உவகை மிகுந்த மகளிர் கூட்டம். இனவளை - கூட்டமாய் உள்ள புற்று. வினை வளையைச் செற்று - முன் செய்த வினை வந்து பற்றும் பொழுது அவற்றை அழித்து.

450. குறிப்புரை: நறவம் - தேன். ஏனம் - பன்றி. இனத்து வலை தைத்திருக்கும் - பலவாய வலைகளை அமைத் திருக்கின்ற (ஈங்கோய்). நங்கை - கங்கை. விரை - துவலை, மணம் பொருந்திய நீர்த்துளிகள். இரவு என்பது எதுகை நோக்கி இறவு எனத் திரிந்தது.

451. குறிப்புரை: நாகமுழை நுழைந்த நாகம் - மலைக் குகையில் நுழைந்த மலைப்பாம்பு. போய் - வெளியே புறப்பட்டுச் சென்று. நாகம் விழுங்க - குரங்கை விழுங்க. நாகம் மாக்கையால் மஞ்சு உரிஞ்சும் - யானை தனது பெரிய கையால் மேகத்தைத் தடவுகின்ற. இது சொற்பின்வருநிலையணி.

452. குறிப்புரை: நாகம் களிறு நுங்க - மலைப் பாம்பு யானையை விழுங்க. உழுவை - புலி தாமரையின் ஆகம் தழுவிட தாவிச் செல்லுகின்ற மானின் உடம்பைத் தழுவி. அசைவு எய்த - தங்கியிருக்க. மேகம் கருவிடைக் கண் நீர் சொரியும - சூல் கொண்ட மேகம் அச்சூலினின்றும் மழையைப் பொழிய. மழை