453. | பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல் வண்கங்கை ஏற்றான் மலை. | | 54 |
454. | பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித் தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக் கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே, வானோர் மருவரியான் மன்னும் மலை. | | 55 |
455. | பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண் டெல்லே பிடியென்னும் ஈங்கோயே, மூவெயிலும் வில்லே கொடுவெகுண்டான் வெற்பு. | | 56 |
456. | பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப் படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் -டிரா இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே, வானோர் குருவருட்குன் றாய்நின்றான் குன்று. | | 57 |
பெய்யும்பொழுது பாம்பு யானையை விழுங்குதல் முதலியவை நிகழ்கின்றன என்பது கருத்து. 453. குறிப்புரை: பணவம் - பாம்பு. புற்றின் பழஞ்சோறு - புற்றாஞ்சோறு என வழங்கும். கணவன் - ஆண் கரடி. இடந்து - பெயர்த்துக் கொணர்ந்து. இட்டகட்டி - இட்ட சோற்றுத்திரள். எண்கு - பெண் கரடி. 454. குறிப்புரை: பன்றி, காட்டுப் பன்றி. பருக்கோடு - பருத்த கொம்பு. புழுதித் தென்றி - மண்மேடு. மணி - மாணிக்கம். கன்றி - மனம் நைந்து. கரி - யானை. 455. குறிப்புரை: நிழல் - வெயில் காரணமாகத் தோன்று கின்ற நிழல். பகடு - வேறோர் யானை. மருப்பு ஒசித்த - பாறை மேலே முட்டித் தன் கொம்பை ஒடித்துக்கொண்ட. செம்முகமா - உதிரம் ஒழுகுகின்ற முகத்தை உடைய யானை. எல்லே - அந்தப் பகற் பொழுதிலே. பிடி என்னும் - பெண் யானை என்று மகிழ்கின்ற. 456. குறிப்புரை: பிடி - பெண் யானை. வேழம் - ஆண் யானை. இடரா - துன்பம் உடையதாய். இருமருப்பைக் கை காட்டும் - தனது இரு தந்தங்களையும் தும்பிக்கையையும் காட்டி அழைக்கின்ற. குரு அருட் குன்று - குரு மூர்த்தியாகிய அருள்மலை.
|