457. | பொருத கரியின் முரிமருப்பிற் போந்து சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் - கருமந்தி முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே, மூவெயிலும் திக்குகக்கச் செற்றான் சிலம்பு. | | 58 |
458. | மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம் குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம் இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே, மூன்று வளவெயில்தீ யிட்டான் மலை. | | 59 |
459. | மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணவ நோக்கிச் சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே, மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு. | | 60 |
460. | மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த புரையிதணம் பூங்கொடியார்புக்கு - நுரைசிறந்த இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே, பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு. | | 61 |
457. குறிப்புரை: முரி மருப்பிற் போந்து - முரிந்த மருப்பினின்றும் வெளிப்பட்டு தூ நீர் என்று, மழைநீர் என்று நினைத்து. கருமந்தி - கருங்குரங்கு (பெண்) முக்கி விக்கி ஒக்கு இருக்கும் - மழுகியும் பருகியும் பிற குரங்குகள் நகைக்க இருக்கின்ற. ஒக என்பது ஒக்கு எனத் திரிந்து வந்தது. திக்கு உகக்க - எட்டுத் திக்கிலும் உள்ளவர்கள் விரும்பும்படி. 458. குறிப்புரை: மறம் - வீரம். குடங்கை - உள்ளங்கை. கொண்டு - எடுத்துக்கொண்ட பின்பு. முத்துக்களை வாரிய குறங்கினார் தேனை இளவெயிலாகிய நீரில் காய்ச்சி உண்கின்றனர் என்க. 459. குறிப்புரை: சிலைநுதலி - வில் போன்ற நெற்றியினை உடைய குறத்தி. சிலைத்து - கடிந்து பேசி. கலை - ஆண் மான். குறவன் பெண் மானைப் பிடித்து வந்ததற்கு குறத்தி சினம் கொண்டு பேச ஆண் மான் விலகிச் சென்றது. 460. குறிப்புரை: மரை அதன் - மான் தோல். புரை இதனம் - உயர்ந்த பரண். இன் நறவு - இனிய தேன்.
|