465. | முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது கள்ளார்ந்த பூப்படியுங் கார்மயில்தான் - ஒள்ளார் எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே, புரிநெடுநூல் மார்பன் பொருப்பு. | | 66 |
466. | வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல் எல்லிப் புகநுழையும் ஈங்கோயே, தீங்கருப்பு வில்லிக்குக் கூற்றானான் வெற்பு. | | 67 |
467. | வான மதிதடவல் உற்ற இளமந்தி கான முதுவேயின் கண்ணேறித் - தானங்(கு) இருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே, நம்மேல் வருந்துயரம் தீர்ப்பான் மலை. | | 68 |
இடங்களிலும். தேன் - பலாச்சுளைச் சாறு 'ஆறாகப் பாயும்' என ஆக்கம் வருவிக்க. "உள்" என்பதனைத் திரியாமலே, 'சுளைத் துண்டுகளுக்குள்ளே தேனாகிய ஆறு பாயும்' என உரைத்தலும் ஆம். 465. குறிப்புரை: முள்ளிலவின் பூச் சிவந்து நெருப்புப் போலக் காணப்படும். அதனால் அவற்றின் நடுவே நிற்கும் மயில் தீயின் நடுவில் தீங்கின்றி நிற்கும் கற்புடை மகளிர் போலத் தோன்றாநின்றது. "வெள்ளிலவு" என்றது அம்மரத்தின் நிறம் வெண்மையாய் இருத்தல் பற்றி. வெறித்தல் - வெற்றிடத்தில் நிற்றல். வெறியாது - வெற்றிடத்தில் செல்லுதல். கள் - தேன். பூப் படிதல் - பூக்களுக்கு நடுவே மூழ்குவதுபோல நிற்றல். கார் மயில் - கரிய மயில், தான், அசை. ஒள் எரி - ஒளி பொருந்திய தீ ஆரெரி - தீண்டுதற்கரிய நெருப்பு. 466. குறிப்புரை: "கன்னி மாங்கொம்பின் கொங்கை அணைந்து" என்பது கன்னிப் பெண்ணுக்கும், மாங்கொம் பிற்கும் ஆய சிலேடை. பெண்மேற் செல்லுங்கால், மாங் கொம்பு - மாந்தளிர்போலும் மேனியை உடைமையால் மாங்கொம்பு போல்பவள். கொங்கை - தனம். வடுப் படுத்தல் - குற்றம் உண்டாக்குதல். மாங்கொம்பின் மேற் செல்லுங்கால், கன்னி - புதுமை. கொங்கை = கொங்கு + ஐ. வாசனையை வடுப்படுத்தல் - மாவடுவை உதிர்த்தல். 'அளைதல் - அளவளாவிக் கலத்தல். எல்லி - இரவு' இவை இரண்டிற்கும் பொது. இதில், தற்குறிப்பேற்றத்தோடு சிலேடை சேர்ந்து வந்தது. சேர்வை யணி கருப்பு வில்லி -கரும்பை வில்லாக உடைய மன்மதன். 467. குறிப்புரை: உற்ற - விரும்பிய. "கண்" என்றது உச்சி யிடத்தை. சந்திரனை மூங்கிலின் உச்சியில் இருப்பதாக மயங்கி,
|