பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை306

468.வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்து
மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே, மறைகலிக்கும்
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.

69

469.வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி - பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே, திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.

70

திருச்சிற்றம்பலம்


அதன் அழகைக் கண்டு அதனைக் கையால் தடவிப் பார்க்க விரும்பிய இள மந்தி, அங்குச் சென்று இல்லாமையால் தன் ஆசையால் மேலே கையை நீட்டிப் பார்ப்பதாயிற்று. இதில் மயக்க அணியும், தொடர்புயர்வு நவிற்சி யணியும் சேர்ந்து வந்தமையால் சேர்வை யணி.

468. குறிப்புரை: வேய் வனம் - மூங்கிற் காடு. அதனிடையே தினை விதைப்பட்டிருந்தது என்க. யானை, களிற்றியானை. வேறு - மறைவன ஒரு தனியிடம். காய் வனம் - வெயில் கடுமையாகக் காய்கின்ற காடு. விசைப்ப - வேகமாக ஏவ. பிடி வேய் அணைத்து முன் ஓட்டும் - பெண் யானை மூங்கிலை வளைத்து அக்கனை களிற்றின்மேல் படாதபடி விலகி ஓடச் செய்கின்ற. மறை கலிக்கும் தாள் - வேதமாகிய சிலம்பு ஒலிக்கின்ற திருவடி. பூப் பிடி - பூவின் தன்மை யைக் கொண்ட. பொன் - அழகு.

469. குறிப்புரை: வழகு - வழுவழுக்கின்ற. அஃதாவது, மெத்தென்ற, காந்தள், செங்காந்தள் மலர். 'தீயின்கண்' என ஏழாவது விரிக்க. பழகி - பன்முறையாக. இது திரிபதிசய அணி.

திருஈங்கோய்மலை எழுபது முற்றிற்று.

* * *