வெண்பா 471. | அடிப்போது தம்தலைவைத்(து) அவ்வடிகள் உன்னிக் கடிப்போது கைக்கொண்டார் கண்டார், - முடிப்போதா வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும் காணாத செம்பொற் கழல். | | 2 |
கட்டளைக் கலித்துறை 472. | கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லாத் தழல்வண்ணங் கண்டே தளர்ந்தார் இருவர்;அந் தாமரையின் நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம் அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.3 | | 3 |
இத்தலத்துக்கு அருகில் ஓடி வந்து பாதலத்தில் வீழ்ந்து விட்டதை ‘ஏரண்டர்’ என்னும் முனிவர் இறங்கி வெளிப்படச் செய்யக் காவிரி மேலே வலம் சுழித்து எழுந்தமையால் ‘வலஞ்சுழி’ எனப் பெயர்பெற்றது, என்பது தலபுராணம். அணி நீர் - அழகிய தன்மை. கொன்றை, முன்னர் அதன் மலரையும், பின்னர் அம்மலரால் ஆகிய மாலையையும் குறித்தலால் இருமடி யாகுபெயர். ‘எனது வேண்டுகோளுக்கு இணங் கினமையால் நீ வாழ்வாயாக’ என்க. 471. குறிப்புரை: ‘வானோரும் காணாத, வலஞ்சுழியான் செம்பொற் கழலை அவ் அடிப் போதினைத் தம் தலைமேல் வைத்து, அவ் அடிகளை (மனத்தில்) உன்னிக் கடிப் போது (மணம் மிக்க மலர்களைக்) கைக்கொண்டாரே (கைக்கொண்டு தூவி வழிபட்டவர்களே) கண்டார்; (ஏனையோர் கண்டிலர்) எனக் கூட்டி முடிக்க. “தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான்”1 எனச் சேக்கிழாரும் அருளிச் செய்தார். போதாக - சூடும் பூவாக. வாள் நாகம் - கொடிய பாம்பு. 472. குறிப்புரை: ‘அம் தாமரையின் நிழல் வண்ணம் ... அழல் வண்ணம் இவற்றோடு வலஞ்சுழியை ஆள்கின்ற அண்ணலை இருவர் தாம் கழல் வண்ணமும், சடைக் கற்றையும் காணகில்லாத் தழல் வண்ணராகக் கண்டே தளர்ந்தார்’ என இயைத்து முடிக்க. தாமரை
1. பெரிய புராணம் - சம்பந்தர் புராணம் - 78.
|