அகவற்பா 473. | அண்ணலது பெருமை கண்டனம்; கண்ணுதற் கடவுள் மன்னிய தடம்மல்கு வலஞ்சுழிப் பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும் திகழொளி முறுவல், தேமொழிச் செவ்வாய்த் திருத்திருங் குழலியைக் கண்டு வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே. | | 4 |
வண்ணம் முதலாகக் கூறியன சிவபெருமான் எவ்வண்ணமும் உடையன் ஆதலைக் குறித்தது. . . . . . . . . . . . . . . வெளியாய், கரியாய், பச்சையனே செய்ய மேனியனே1 எனத் திருவாசகத்திலும் வந்தது. முந்நீர் - கடல்; கடல். ‘கடல் போலும் காவிரியின் வலஞ்சுழி’ - என்க. 473. குறிப்புரை: ‘குழலியைக் கண்டு என் உள்ளம் வருந்தி வந்த அப்போதே அண்ணலது பெருமை கண்டனம்’ - என இயைத்து முடிக்க. இது தோழி வெறி விலக்கிக் கூறியது. அண்ணல், தலைவன். தடம் மல்கு - பொய்கைகள் மிக்க. வைசேடிகர் பண்பு, தொழில் முதலிய அனைத்தையும் ‘பொருள்’ எனக் கூறும் முறைபற்றிப் பண்பினை இங்கு, “பொருள்” என்றார். பனி - குளிர்ச்சி. குளிர்ச்சியாகிய பண்பு. காவிரி வலஞ்சுழித்து ஓடுதலால் அதனைச் சார்ந்து விளங்கும் தலம் குளிர்ச்சியைத் தருவதாயிற்று ‘வலஞ்சுழிப் பொருள்’ என இயையும். பயத்தலுக்கும், பழித்தலுக்கும் கருவியாய ‘மேனியால்’ என்பது வருவிக்க ‘மேனி தரும் குளிர்ச்சி மனத்திற்கு மா என்க. பல்லவம் - தளிர், திருந்துதல், நன்கு சீவிமுடித்தல். தலைவனோடுகளவில் இயற்கைப் புணர்ச்சி எய்தி தலைவி வந்த காலத்தில் தோழி அவளது வேறுபாட்டைக் கண்டு வருந்தினளாயினும், ‘எட்டியும், சுட்டியும் காட்டப் படாத குலத்தை யுடையவளாகிய இவளது உள்ளத்தைப் புதுவதாக ஒருமுறை கண்ட பொழுதே முற்றிலும் கொள்ளை கொண்டவன் பல்லாற்றானும் ஒப்புயர்வற்ற தலைவனே யாவன்’ என உய்த்துணர்ந்து மகிழ்ந்தாளாதலின், அதனைத் தலைவிதன் வேறுபாடு தெய்வத்தான் ஆயதாகக் கருதி வெறி யாடத் தொடங்கியோர்முன் செவிலி கேட்பக் கூறினாள் என்க.
1. நீத்தல் விண்ணப்பம் - 31.
|