பக்கம் எண் :

31அற்புதத் திருவந்தாதி

காரைக்கால் அம்மையார்
அருளிச் செய்த

4. அற்புதத் திருவந்தாதி

(வெண்பா)
திருச்சிற்றம்பலம்

 

44.பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப(து) இடர். 

1

 

45.இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா(து) என்நெஞ் சவர்க்கு. 

2


44. அற்புதம் - ஞானம்

அ. சொ. பொ.: பயின்ற - பயின்று நன்கு உணர்ந்த. பின் - பிற்பட்ட காலம். என்றது, ‘சிறு காலையே’ என்றபடி. சேர்ந்தேன் - துணையாக அடைந்தேன். என்றது, தமது ஞானத்தின் இயல்பைக் குறித்தவாறு. இதனையே சேக்கிழார்

‘வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை

அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்று.’1

என அருளிச் செய்தார். நிறம் - அழகு. ‘மணிகண்டம்’ எனப்படுதல் அறிக. மை ஞான்ற - கருமை நிறம் ஓரளவில் (கண்டத்தளவில்) ஒட்டி நின்ற. இடர் - துன்பம்; பிறவித் துன்பம். “எஞ்ஞான்று தீர்ப்பது” என்றது, ‘அதனை யறிந்திலேன்’ என்னும் குறிப்பினது, அஃதாவது, ‘இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ’ என்பதாம்.

45. அ. சொ. பொ.: படரும் நெறி - செல்லும் கதி என்றது, நற்கதியை. பணித்தல் - உரிமை செய்தல். உம்மைகள், ‘அவற்றை அவர் செய்யாதொழியார்’ என்பதைக் குறித்தலின், எதிர்மறை. சுடர் உரு - ஒளி வீசுகின்ற உருவம். ‘கோலத்தோடு’ என உருபு விரிக்க. “அவர்க்கு” என்பதன் பின், ‘ஆயினமையால்’ என ஒரு சொல்


1. பெரிய புராணம் - காரைக்காலம்மையார் - 5