அகவற்பா 476. | முகிற்கணம் முழங்க முனிந்த வேழம் எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும் சாரல் தண்பொழில் அணைந்து சோரும் தடம்மாசு தழீஇய தகலிடம் துடைத்த தேனுகு தண்தழை தெய்வம் நாறும் சருவரி வாரல்;எம் பெருமநீர் மல்கு சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த மணிநீர்க் குவளை அன்ன அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே. | | 7 |
வெண்பா 477. | பொருள்தக்கீர், சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும் அருள்தக்கீர்; ‘யாதும்ஊர்’ என்றேன் - மருள்தக்க மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார், தாம்மறைந்தார்; காணேன்கைச் சங்கு. | | 8 |
476. குறிப்புரை: ‘எம் பெரும, ஆயிழை பொருட்டு, (நீ) சரு வரி வாரல்’ என இயைத்து முடிக்க. ‘இடி முழக்கத்தைச் செய்த முகிற் கூட்டத்தைக் களிற்றியானை. ‘வேறு யானை’ என்று கருதிச் சினந்து அதனைத் தன் தந்தங்களுக் கிடையே கோத்துக் கொள்ள, தவறாகக் கொண்ட அதன் சினத்தை ஆற்றுதற்குப் பிடியானை அதன் அருகு வந்து அணையும் தண்பொழிலில் தானும் வந்து சினம் தணிந்தகளிற்றின் மதம் ஒழுகப் பெறும் வழி மாசுபட்டதாக அதனைத் தம்மேல் ஒழுகிய தேனைச் சிந்தித்தூய்மைப் படுத்துகின்ற தண்ணிய தழைகள் தெய்வ மணம் கமழ்கின்ற, தேவர் உண்டாட்டுச் செய்கின்ற வழியிலே வருதல் வேண்டா’ எனப் பொருள் காண்க. சரு - தேவர் உண்ணும் உணவு. வரி - இசை அஃது அதனையுடைய வழியைக் குறித்தது இது, இரவுக் குறி வரும் தலைவனை ‘அது வேண்டா’ என விலக்கியது. இதன் பயன், அவன் களவு நீட்டியாது வரைவு முயலல். 477. குறிப்புரை: பொருள் தக்கீர் - பொருள்கள் பலவற்றுள்ளும் ‘பொருள்’ என்று உணரத் தக்கவரே. நீர் சில பொருள்களைப் பிச்சையாக ஏற்றற்கு இல்லங்களில் புகுந்தீராயினும், அருள் தக்கீர் - கருணையால் பெரிதும் தகுதி வாய்ந்திருக்கின்றீர். ஆகவே, ‘நும் ஊர் யாது’ என அறிய விரும்புகின்றேன் - என்றேன். அவர் ‘மறையம்’
|