கட்டளைக் கலித்துறை 478. | சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண்நக்கன் பங்கன்(று) இருவர்க் கொருவடி வாகிய பாவையையே. | | 9 |
அகவற்பா 479. | பாவை ஆடிய துறையும், பாவை மருவொடு வளர்ந்த வன்னமும், மருவித் திருவடி அடியேன் தீண்டிய திறனும் கொடியேன் உளங்கொண்ட சூழலுங், கள்ளக் | 5 | கருங்கண் போன்றகாவியும் நெருங்கி |
என்றார். ‘நம் வாழ்வு வலஞ்சுழி’ என்றார். இவ்வாறு சொல்லி மறைந்து விட்டார். அப்பொழுதே என் கையில் இருந்த சங்க வளையலை நான் காணவில்லை. மருள் தக்க - வியக்கத் தக்க. மறை - மறைக்காடு. மறையம் - அதன்கண் உள்ளேம் “வாழ்வு” என்பு. அதற்கு உரிய இடத்தைக் குறித்த ஆகுபெயர். பின்பு அவரைக் காணாது காதல் மிகுதியால் உடல் மெலிந் தாளாகலின் அவள் கையிலிருந்த வாளை அவளை யறியாமல் கழன்று ஒழிந்தது. இது நொதுமலர் வரைவு நோக்கித் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது. 478. குறிப்புரை: திரை, சங்கங்களைப் புரளச் சுமந்து ஏறும் கழி’ என்க. வங்கம் - மரக்கலம். ஆறு அங்கம் - வேதத்திற்கு அங்கமான ஆறு நூல்கள். அவற்றில் சொல்லப்பட்ட முறைமை களை உடைமையால், நான்மறையை அவையேயாகக் கூறினார். “புலன் ஐந்து” என்பது உபலக் கணத்தால் அனைத்துத் தத்துவங்களையும் குறித்தது. ‘இவையான நான்மறை’ என்றதற்கும் அங்கங்கட்கு உரைத்தவாறே கொள்க. ‘நான்மறையை அருளிச் செய்த முக்கண் நக்கன்’ என்க. ‘அவனது பங்கில் அன்றே இருவர்க்கும் ஒருவடிவேயாகும்படி ஒன்றியிருக்கின்ற பாவையை (தேவியை) வலஞ்சுழி வழிச் சென்று கழியருகே துறையிடைக் காணுதிர். என இயைத்து முடிக்க. “பாவையைக் காண்டிர்” என்றாராயினும் ‘முக்கண் நக்கர் பாவையோடு ஒன்றாய், ஒருவடிவாய் இருக்கும் கோலத் தைக் காண்மின் என்பதே கருத்தென்க. இஃது இறைவரது அர்த்தநாரீசுர வடிவத்தை வியந்தவாறு. 479. குறிப்புரை: ‘வலஞ்சுழியில் வண்டினம் பாடும் சோலையாகக் கண்ட அக் கடிபொழில்தானே, துறையும், வன்னமும், திறனும், சூழலும், காவியும் நெருங்கி அவளை போன்றதன்றே’ - என இயைத்து முடிக்க.
|