| அவளே போன்ற தன்றே! தவளச் சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி வண்டினம் பாடுஞ் சோலைக் கண்ட அம்மஅக் கடிபொழில் தானே. | | 10 |
வெண்பா 480. | தானேறும் ஆனேறு கைதொழேன், தண்சடைமேல் தேனேறு கொன்றைத் திறம்பேசேன், - வானேறு மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என் கையார் வளைகவர்ந்த வாறு. | | 11 |
பாவை ஆடுதல், மகளிர் பாவையைக் கையில் குழந்தை யாக ஏந்தி அது பேசுவது போல வைத்து அதனுடனே பேசி நீரில் மூழ்கியாடுதல். ‘ஆடாநின்ற’ என்னும் நிகழ்காலம், ‘ஆடிய’ என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. ‘பாவையை மருவுதலோடு வளர்ந்த வன்னமும்’ என்க. வன்னம் - அழகு. கடல் நீர் பாவையோடு பொலிதலால் ஓர் அழகு பெற்று விளங்குவதாயிற்று, “அடியேன், கொடியேன்” என்பன தன்னை வெறுத்துக் கூறிக்கொண்டன. தலைவிதன் பாதங்களை, “திருவடி” என்றான். திரு - அழகு, அதனைத் தலைவன் தீண்டியது, வணங்கியது. “திறன்” என்றது, அதன் அடையாள மாகப் பதிந்த சுவட்டினை. உள்ளத்தைக் கவர்ந்தவள் தலைவி. கவர்ந்த இடத்தைக் காணும் பொழுது, கவர்ந்த நிலைமை உள்ளத்தில் தோன்றுகின்றது. காவி - குவளை மலர். துறை, வன்னம், திறன், சூழல் இவை அனைத்தினாலும் கடற்றுறை தலைவனுக்குத் தான் முன்பு அங்குக் கண்ட தலைவிபோலவே தோன்ற, அவன் இவ்வாறு வருந்திக் கூறினான். எனவே இது, களவொழுக்கத்தில் தலைவன் வறுங்களம் நாடி மறுகியதாம். தவளம் - வெண்மை. சாந்தென - சந்தனமாக. தைவந்து - உடம்பெங்கும் பூசிக் கொண்டு. தேம்பல் - இளைத்தல். சிறிதாதல். ‘ஏற்றை (எருதை) உடையவன் உழவன்’ என்னும் முறையில் “உழவன்” என்க. கூறினார். ‘ஏற்றை ஊர்ந்து வந்து அடியவர்க்கு அருள் செய்பவன்’ என்பது கருத்து. சோலை, கடற்கரைச் சோலை. ‘சோலையாக’ என ஆக்கம் வருவிக்க. ‘கண்ட பொழில்’ என இயைக்க. ‘தான்’ என்பது. கட்டுரைச் சுவைபட வந்தது. அம்ம, வியப்பிடைச் சொல். இது ‘நோக்குவ எல்லாம் அவைபோறல்’ என்னும் நிலைமையாம். 480. குறிப்புரை: வான் ஏறும் மை ஆரும் சோலை - வானத்தில் செல்கின்ற மேகங்கள் நிறைந்த சோலை, ‘கண்டு தொழுதபின்
|