பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை314

கட்டளைக் கலித்துறை

481.ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக்
கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு
நாறுதண் கொம்பரன் னீர்கள்,இன் னேநடந் தேகடந்தார்
சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.

12

அகவற்பா

482.நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூற் சீறியாழ்ப் பாண,
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர,
மூவோம் மூன்று பயன்பெற் றனமே;
5நீஅவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமற் பேச வன்மையில்
வான்அர மகளிர் வான்பொருள் பெற்றனை;

வளையைக் கவராது, கண்ட பொழுதே கவர்ந்தான்’ என இமைப்பில் காதல் மிக்கமையை வியந்து கூறினாள். இது வியப்போடு கூடிய அவலம், அவலம் அணை யாமையால் உண்டாயது. இது பெண்பாற் கைக்கிளை.

481. குறிப்புரை: கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்த, அஃதாவது அழகிய. ‘வலஞ்சுழியில் கொம்பர்’ என இயையும். வலஞ்சுழியில் உள்ள கொம்பர். கொங்கு - தேன், இன்னே - இப்பொழுதே. சேண் நெறி - நீண்ட வழி. ‘கொம்பர் அன்னீர், ‘இன்னே, கானவர் வாழ்கின்ற சேண் நெறி, (ஒருவனும், ஒருத்தியும்) நடந்தே கடந்தார்’ என இயைத்து முடிக்க. இது, புணர்ந்துடன் போய தலைமகளைப் பின் தேடிச் சென்ற செவிலி ஆற்றிடை (வழியிடை)க் கண்டோரை வினவ, அவர் கூறியது. “கடந்தார்” என்பதற்கு எழுவாய் தோன்றாது நின்றது.

482. குறிப்புரை: நெறிதரு குழல் - நெறிந்த கூந்தல். விறலி - பாணிச்சி; பாணன் மனைவி. தமிழ், இசைத்தமிழ், அதன் நூலிற் செல்லப்பட்ட இலக்கணப்படி அமைந்த சீறியாழ் பேரியாழ் வேறுளதாகலின், இதனை, “சீறியாழ்” என்றாள். ஊரன் - மருதநிலத்துத் தலைவன். பொய்கை ஊருக்கு அடை. ஊரன் பழைய மணத்தை வெறுத்துப் புதுமணம் செய்து கொண்ட நிலையில். மூவாம் - நாங்கள் மூன்று பேர். யாவரெனில், நானும், என் தோழியும், என் மகனும், மூன்று பயன் பெற்றனம் ஒவ்வொருவர் ஒவ்வொரு