| அவரேல், எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ விழையா இன்பம் பெற்றனர்; யானேல் அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச் சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பின் தீநீர் அன்ன வாய்நீர் சோரும் சிலம்புகுரற் சிறுபறை பூண்ட அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே. | | 13 |
பயனைப்பெற்றோம். எங்ஙனம் எனில், யான் இல்லக் கிழத்தியான நிலையில் நன்மகனை ஈன்று புறந்தருதலாகிய தலைக்கடனை இறுத்தேன். என் தோழி அதற்கு உறுதுணையாய் இருந்து தன் கடமையை ஆற்றினாள். என் மகன் தான் தாயைக் கடனாளி யாய் இருப்பதினின்றும் நீக்கிக் கடன் நிரப்பினான். நீ இல்லது பாதியும், உள்ளது பாதியுமாகப் பொய்களைச் சொல்லிப் பிறரை மகிழ்விக்க வல்ல வல்லமையினால் அந்தப் புதுமணப் பெண்டிராகிய தேவமாதரால் மிகப் பெரும் பொருகளை அடைந்தாய். அவரோ (தலைவனோ) என் தங்கைமார்களது கொங்கைகளைத் தழுவி, உள்ளத்தில் அவர்கள் விரும்பாத இன்பத்தைத் தாம் விரும்பிப் பெற்றார். (அவர்கள் விரும்பியது பொருளே யன்றி இவரது இன்பத்தையன்று என்பதாம்) ‘ஆகவே, அவர் அவர்களோடே இருத்தற்கு உரியர்; யான் என் மகனோடே யிருத்தற்குரியேன்; இங்கு அவருக்கு என்ன தொடர்பு? என. தலைவி தான் புதல்வற் பெற்று நெய்யாடிய தறிந்து தலைவன் ஏவ வந்து வாயில் வேண்டிய பாணனுக்கு வாயில் மறுத்தாள். ஈற்றில் உரைத்த மறுப்புரை குறிப்பெச்சம் ‘தார்’ என்பது போக காலத்தில் அணியும் மாலை யாகலின், “தார் மாலை” என்றது இருபெயர் ஒட்டு. ஊடிக் கூறுகின்றார் ஆதலின் ‘வான் அர மகளிர்’ என்றது இகழ்ச்சி தோற்றி நின்றது. “என் தங்கைமார்கள்” என்றதும் அன்னது. சுரும்பு இவர் நறவு - வண்டுகள் மொய்க்கக் கரும்பினின்றும் ஒழுகுகின்ற சாறு. ‘நறா’ என்பது, ஈறு குறுகி உகரம் பெறாது நின்றது. இது வயலுக்கு அடை. ‘கருப்பஞ் சாறுபோன்ற வாய் ஊறல் ஒழுகும் புதல்வன்’ என்க. இதனால் மக்களால் பெறும் இன்பம் பெரிதாதலைத் தலைவி குறிப்பால் உணர்த்தி, ‘இஃது அவர்க்குக் கிடையாதாயிற்று’ என்பதையும் குறித்தாள். சிலம்பு குரல் ஒலிக்கும் குரல் “அலம்பு குரல்” என்றதும் அன்னது. கையில் கொண்ட ‘பூண்ட களிறு’, ‘கிங்கிணிக் களிறு’ எனத் தனித்தனி முடிக்க. கிங்கிணி - சதங்கை. புதல்வனை அளவற்ற அன்பால் “களிறு” என்றாள். பாணன் விறலியொடு கூடி வந்ததைக் குறித்தது. ‘இத்தகைய அன்பைத் துறந்தவனுக்காக நீ பரிந்து பேசுதல் தகுதியோ’ என்றற்கு. இது பரத்தையிற் பிரிவு நிகழ்ச்சி. இவ் அகவற்பா இடையிடையே கூன் பெற்று வந்தது.
|