பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை318

ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை;
ஆற்ற முன்னெறி பயந்தனை;
செறிய இரண்டும் நீக்கி;
10ஒன்று நினைவோர்க் குறுதி ஆயினை;

அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவி லோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை; அந்நெறி
நான்கென ஊழி தோற்றினை;

15சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை;

குறிப்புரை: (அடி-1) ஒன்று புரிந்து - வீடு பேற்றினை விரும்பி. (உயிர்கள் அடைய வேண்டும் என்று கொன்றை சூடினை என்க.) ‘கொன்றைப் பிரணவ வடிவினது ஆதலால், பிரணவத்தின் பொருள் தானே என்பதை உயிர்கள் உணர்ந்து வீட்டையவே அம்மாலையை அடையாள மாலையாகச் சிவன் சூடியுள்ளான்’ என்றபடி. (அடி-2) ஒன்றின் - ‘ஒரு காம்பிலே ஐந்து இதழ்’ என்க. ஈர் இதழ் - குளிர்ந்த இதழ் (அடி-5) இரு கோடு - இரண்டு முனை. (அடி-7) ‘மூவெயிலது அரண்’ என்க. முரண், நாற்றிசையிலும் செல்லும் முரண், முரண் - வலிமை. அரண் - பாதுகாவல். ‘முரணுடைய அரண்’ என்க. (அடி-8) ஆற்ற மிகவும், ஆற்றப் பயத்தல் - முற்ற விளக்குதல். முன் நெறி முதல் நெறி “முன்னெறியாகிய, முதல்வன் முக்கணன் தன்னெறி”1 என அப்பரும் அருளிச் செய்தார். “முன்னெறி” என்பது ஓசை வகையில் ‘முந்நெறி’ என்பதனோடு ஒத்து, ‘மூன்று’ என்னும் எண்ணலங்காரமாய் நின்றது. இவ்வாறு மேலும் வருவனவற்றை அறிந்து கொள்க.

(அடி-9) இரண்டு - விருப்பு வெறுப்புக்கள் (அடி-10) ஒன்று, திருவருள். உறுதி - நல்ல துணை. (அடி-11, 12) ‘அந்நெறி ஒன்றையே மனத்துள் வைத்து’ என்க. இரண்டு நினைவு - ஐயம் (அடி-13) முன் நெறியால் அடையப்படும் உலகம் சிவ லோகம். ‘அந்நெறியில்’ என ஏழாவது விரிக்க (அடி-14) ஊழி - யுகம். ‘ஊழி நான்கு எனத் தோற்றினை’ (படைத்தனை) என்க. (அடி-15) சொல்லும் - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற. அசைத்து - உறுப்புக்களில் கட்டி. அசைந்தனை - ஆடினை (அடி-16) மேல் முகம் உச்சி முகம், கபாலம் - தலை ஓடு. (அடி-17) ‘நூல் முகப் புரி’ என்க. தோளில் ஏந்திய அங்கத்தை மார்பில் ஏந்தியதாகக் கூறினார். (அடி-18) இருவர், அயனும், மாலும் அங்கம்


1. திருமுறை - 4.11.9