| நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை; நூன்முக முப்புரி மார்பில் இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய ஒருவநின் ஆதி காணா(து) இருவர் | 20 | மூவுல குழன்று நாற்றிசை உழிதர ஐம்பெருங் குன்றத்(து) அழலாய்த் தோன்றினை; ஆறுநின் சடையது; ஐந்துநின் நிலையது; நான்குநின் வாய்மொழி; மூன்றுநின் கண்ணே; இரண்டுநின் குழையே; ஒன்றுநின் ஏறே | 25 | ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க இருங்களிற் றுரிவை போர்த்தனை; நெருங்கி முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய அறுதொழி லாளர்க்(கு) உறுதி பயந்தனை, ஏழில் இன்னரம் பிசைத்தனை; | 30 | ஆறில் அமுதம் பயந்தனை; ஐந்தில் விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை ஆலநீழல் அன்றிருந் தறநெறி நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை; நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக் | 35 | கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன் |
எலும்புக் கூடு. இது ‘கங்காளம்’ எனப்படும். (அடி-19) ‘ஒருவனாகிய நினது’ என்க. “ஆதி” என்றதனானே அந்தமும் கொள்க. ஐ - அழகு. இஃது ‘ஐந்து’ என்பதுபோல நின்றது. (அடி-22) ஆறு - யாறு; கங்கை. இதுவும் எண்ணுப் பெயர்போல நின்றது, ஐந்து நிலைகளாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் (அடி-23) வாய்மொழி, வேதம். (அடி-25) இரண்டு - இரண்டு வகை. “குழை” என்பது பொதுப்பட, ‘காதணி’ என்னும் பொருட்டாய் நின்றது. (அடி-26) இரு - பெரிய இதுவும் எண்ணுப் பெயர்போல வந்தது. (அடி-28) உறுதி, அறம் முதலிய பொருள்கள். ஆறில் அமுதம் - அறுசுவையில் உணவு. ஐந்து - ஐந்து வகையான இசைக் கருவிகள். (தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு.) (அடி-31) கொட்டு - வாச்சியம் உம்மை, எச்சப் பொருட்டு. ‘எல்லா வாச்சியங்களையும் இறைவன் உடையவன்’ என்றபடி, (அடி-34) முந்நீர் - கடல் ‘முந்நீரில் நின்ற’ என்க. சூர் மா - சூரபதுமனாகிய மாமரம். (அடி-35) இரு வரை - பெரிய மலை; கிரௌஞ்சம். (அடி-36) மிடல் வடிவம் - விசுவ ரூபம்.
|