| தாதை; ஒருமிடல் திருவடி வாயினை, தருமம் மூவகை உலகம் உணரக் கூறுவை; நால்வகை இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை; | 40 | ஐயங்கணை யவனொடு காலனை அடர்த்தனை; அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை, ஏழின் ஓசை இராவணன் பாடத் தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினை, ஆறிய சிந்தை யாகி,ஐங்கதித் | 45 | தேரொடு திசைசெல விடுத்தோன் நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென்(று) ஏற்ற பூதம் மூன்றுடன் பாட இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண | 50 | நடடம் ஆடிய நம்ப, அதனால் |
மிடல் - வலிமை. (அடி-37, 38) ‘தருமம் கூறுவை’ என இயையும். (அடி - 38, 39) ‘நால்வகை இலக்கணங்களையும், அவற்றையுடைய இலக்கியங்களையும் மொழிந்தனை’ என்க. நால்வகை இலக்கணமாவன ‘எழுத்து, சொல், பொருள், செய்யுள்’ என்பன பற்றியவை, அணியிலக்கணம் வடநூற் கொள்கை. (அடி - 41) நெறிமையில் நெறியாம் வகையில். (அடி - 42) ‘ஏழ் இன் ஓசை’ என்க. ஓசை - இசை. (அடி - 43) தாழ்வு - இரக்கம். “அவன்தலை” என்பதில் தலை ஏழன் உருபு. அளி - அருள், (அடி - 44) ஆறிய - தணிந்த, சிந்தையனை, “சிந்தை” என்றது ஆகுபெயர் (அடி - 45) ஐங்கதி குதிரைகளின் ஓட்டத்தின் வகை. ‘ஐங்கதியொடு தேர் திசை செல விடுத் தோன்’ - என மாற்றி யுரைக்க. தேர் விடுத்தோன் பிரமன். (அடி - 46, 47) அவனுக்கு முகம் நான்காயினும் தோளும் நான்கே. நலன், இங்குத் திறமை. ‘அதனைப் பாட’ என்க. நந்தி பிங்கிருடி - நந்தி கணத்ததாகிய பிங்கிருடி “பூதம் மூன்று” என்றதனால், தண்டி, குண்டோதரன் இவர் கொள்ளப்பட்டனர், (அடி - 48) கண் - பக்கம். மொந்தை, ஒருவகை வாச்சியம். ஒரு கணம் - ஒப்பற்ற கணங்கள் மட்டு விரி - தேனோடு மலரும் (அடி - 50) “அதனால்” என்றது, கூறிவந்தவை அனைத்தையும் தொகுத்துக் குறித்தது. ஆகையால் இப்பாட்டினை, ‘நம்ப, நீ ஓர் உடம்பு ஈருருவாயினை; கொன்றை சூடினை;....... அளி பொருந்தினை, அதனால், சிறியேன் சொன்ன வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல்
|