பக்கம் எண் :

321திருஎழுகூற்றிருக்கை

சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ள யாகல் வேண்டும்;
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
55பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே.

வெண்பா

பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து.

திருச்சிற்றம்பலம்


வேண்டும்; (அதன்பொருட்டு) அண்ணலாகிய நின் பாதம் சென்னியிற் பணிந்து பரவுவன்’ என இயைத்து முடிக்கற் பாற்று. (அடி - 52) வறிது - பொருளற்றது.

வெறி - நறுமணம். ‘சிவபெருமான் ஊழியிறுதியில் வீணை வாசித்திருப்பன்’ என்பதை,

‘பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு

பிரமனும்போய்,

இருங்கடல் மூடி யிறக்கும்; இறந்தான்

களேபரமும்,

கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு

கங்காளராய்

வருங்கடல் மீளநின்(று) எம்மிறை நல்வீணை

வாசிக்குமே’1

என்னும் அப்பர் திருமொழியால் அறிக. முக்காலத்தும் நிகழற் பாலதனை, “பாடிய” என இறந்த காலத்தில் வைத்துக் கூறினார்.

திருஎழுகூற்றிருக்கை முற்றிற்று


1. திருமுறை - 4.112.7.